பொன்னியின் செல்வன் படத்துக்காக லைகா நிறுவனம் அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை முன்பு பிரமாண்ட விளம்பரம் செய்து பதிவிட்டுள்ளது.
தமிழ் சினிமா ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம் இன்று (ஏப்.28) வெளியாகியுள்ளது.
இயக்குநர் மணிரத்னம் ஏற்கனவே இரண்டு முறை இந்தப் படத்தை எடுக்க முயற்சிகள் மேற்கொண்டு கைவிட்ட நிலையில், இறுதியாக லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க தன் கனவுப் படமான இந்தப் படத்தை இயக்குநர் மணிரத்னம் எடுத்து முடித்துள்ளார். சென்ற ஆண்டு பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியான நிலையில் இந்தப் படம் மொத்தம் 500 கோடிகள் வரை வசூலித்து கோலிவுட்டின் மாபெரும் ஹிட் படமாக வசூலித்துள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் இன்று வெளியாகியுள்ளது. விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத் குமார், பார்த்திபன், ஷோபிதா, பிரபு எனப் பல நடிகர்கள் நடித்துள்ள இந்தப் படத்தின் முதல் காட்சி இன்று காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கியது.
அமெரிக்க சுதந்திர தேவி சிலை:
படக்குழுவினர் பலரும் முதல் காட்சியைப் பார்க்க திரையரங்குகளுக்கு வருகை தந்து வரும் நிலையில், ரசிகர்கள் படத்துக்கு பெரும் வரவேற்பை அளித்து வருகின்றனர்.
மேலும், வெளிநாடுகளில் படம் பார்த்து மகிழ்ந்த ரசிகர்கள் தொடங்கி சமூக வலைதளங்களில் தங்கள் விமர்சனங்களையும் கருத்துகளையும் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் முன்னதாக அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை முன் லைகா நிறுவனம் விமானம் மூலம் Cholas are Back (மீண்டும் திரும்பிய சோழர்கள்) எனும் வாசகத்துடன் கூடிய கொடியை வானில் பறக்கவிட்டு விளம்பரம் செய்து அசத்தியுள்ளனர்.
இந்த வீடியோவை லைகா நிறுவனம் தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், நடிகை த்ரிஷாவும் , இந்த வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கு பெரும்பாலும் நேர்மறை விமர்சனங்களே குவிந்து வரும் நிலையில், சென்ற பாகத்தைப் போலவே ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக திரையரங்குகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.
மேலும் படிக்க:6 Years of Baahubali 2: ‘கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? ’ - உலகைச் சுற்றி வந்த ஒற்றை கேள்வி; 6 ஆண்டுகளை கடந்த பாகுபலி-2