பொன்னியின் செல்வன் படத்திற்கான டிக்கெட்  புக்கிங் வேகமாக நடந்து வருகிறது.  


மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி என ஒரு நட்சத்திரபட்டாளமே நடித்திருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப்படத்திற்கான டிக்கெட் புக்கிங் நேற்று தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களிலேயே படத்தின் முதல் காட்சிக்கான டிக்கெட்கள் விற்றுத்தீர்ந்தன. தொடர்ந்து இதர காட்சிகளுக்கான டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்து வருகின்றன. 




 


கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள சரித்திர காவிய திரைப்படமான "பொன்னியின் செல்வன்" திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு இருக்கிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய் என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கும் இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். 


இந்தப்படத்தின் பிரோமோஷனின் ஆரம்பமாக படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து படத்தில் இருந்து போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. அதனைத்தொடர்ந்து படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. ஆனால் டீசர் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. அதனைத்தொடர்ந்து  'பொன்னி நதி' பாடல் வெளியிடப்பட்டது.  


 


                                                 


இந்தப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சோழா சோழா பாடல் வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.


 


 


                                                     


இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையுலக ஜாம்பவான்களாக இருக்கும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டனர். இந்த நிகழ்வில் படத்தில் நடித்த கலைஞர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் இதர தமிழ் பிரபலங்களும் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து படத்தை பிரமோட் செய்யும் விதமாக படக்குழு கேரளா, ஹைதராபாத், மும்பை என பறந்து கொண்டிருக்கிறது.