மணிரத்னத்தின் கனவுப் படமான ‘பொன்னியின் செல்வன்’ செப்டெம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி பெரும் சாதனைகளை படைத்து வருகிறது.


உலகம் முழுவதும் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள பொன்னியின் செல்வன் படம், தமிழ்நாட்டில் மிக விரைவாக 100 கோடிக்கும் மேல் ஈட்டி கோலிவுட்டில் வரலாற்று சாதனை படைத்துள்ளது.


ரஹ்மானின் இசை தாண்டவம்


இயக்குநர் மணிரத்னம், படத்தின் பெரும் நட்சத்திரப் பட்டாளம், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைத்து தரப்பினரும் இப்படத்தில் பெரும் உழைப்பை வாரி இறைத்து வெற்றிக்கு வித்திட்டுள்ளனர்.


இதில்  முக்கியமாக படத்தின் அப்டேட்டுகள் வரத் தொடங்கிய காலம் முதலே வழக்கம்போல் தன் இசையால் கவனம் ஈர்த்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். ரஹ்மான் இசையில் பாடல்கள் ஏற்கெனவே ஒரு புறம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், மற்றொருபுறம் பின்னணி இசை படத்தை அடுத்த தளத்துக்கு எடுத்துச் சென்று பார்வையாளர்களை திரையரங்குகளில் கட்டிப்போடும் வகையில் அமைந்துள்ளது.


பொன்னி நதி பாக்கணுமே....


மேலும், படத்தில் முதன்முதலாக வெளியான ’பொன்னி நதி’ பாடல் குறிப்பாக படத்துக்கு சிறந்ததொரு ஓப்பனிங் பாடலாக அமைந்து வலுசேர்த்துள்ளது.


குறிப்பாக பாடலின் கோரஸ் வார்த்தைகளான ‘ஈயாரி எசமாரி’ சென்சேஷனாகி ரசிகர்களை ஆட்கொண்டது.  ஏ.ஆர்.ரஹ்மான், பாம்பா பாக்யா, ரைஹானா ஆகியோர் இணைந்து பாடிய இப்பாடலுக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது.


இந்நிலையில், ’பொன்னி நதி’ பாடலை ஸ்விம்மிங் பூலில் இருந்தபடி ஏராளமான மக்கள் ஒன்று சேர்ந்து பாடி வைப் (vibe) செய்யும் வீடியோ வெளியாகி இணையத்தில் ஹிட் அடித்துள்ளது.


தீபிகா எனும் பிரபல டிஜே இந்த வீடியோவை தன் இன்ஸ்டா பக்கத்தில் முன்னதாகப் பகிர்ந்துள்ள நிலையில், இந்த வீடியோ கிட்டத்தட்ட 3 லட்சம் பார்வையாளர்களைப் பெற்று லைக்ஸ் அள்ளி வருகிறது.


 






முன்னதாக ஏ.ஆர்.ரஹ்மான் - இயக்குநர் மணிரத்னம் கூட்டணி திரைத்துறையில் 30 ஆண்டுகள் கடந்ததைக் கொண்டாடிய நிலையில், இவர்களது ரசிகர்களுக்கு பொன்னியின் செல்வன் பாடல்கள் விருந்தாய் அமைந்துள்ளன.


 






முன்னதாக இப்பாடலுக்கு நடனம் அமைத்த பிருந்தா மாஸ்டரும் ஆடி வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோவும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.