காதலில் சொதப்புவது எப்படி படத்தில் அறிமுகம் ஆன ஐஸ்வர்யா மேனன், அதன் பின் ஆப்பிள் பெண்ணே,தீயா வேலை செய்யனும் குமாரு, வீரா,  தமிழ் படம் 2, நான் சிரித்தால் ஆகிய படங்களில் நடித்தார். தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா மேனன், இன்ஸ்டா பக்கத்தில் செம ஆக்டீவ். 


பிட்னஸ் மீது தீராத காதல் கொண்ட இவர் உடற்பயிற்சி வீடியோக்களையும், போட்டோஷூட் புகைப்படங்களையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இதனால் அவருக்கென பெரிய ரசிகர்கள் கூட்டமே இன்ஸ்டாவில் உண்டு. இந்நிலையில் பொங்கல் சிறப்பாக வீடியோ ஒன்றை ஐஸ்வர்யா பதிவேற்றம் செய்துள்ளார். பாவடை தாவணியில் பாடல் வரிகள் இணைக்கப்பட்ட அந்த வீடியோ இணையத்தில் ஹிட் அடித்து வருகிறது.