தமிழர் திருநாளான பொங்கல் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே பொதுமக்கள் பொங்கலை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். புத்தாடை உடுத்தியும், பொங்கல் பொங்கியும், பொங்கலோ பொங்கல் எனக் கூவி இவ்விழா கொண்டாடப்படுகிறது. நண்பர்களும் உறவினர்களும் வாழ்த்துகளையும் அன்பையும்  பரிமாறி மகிழும் திருநாளாக இருக்கிறது பொங்கல் விழா. 



பொங்கல் என்றாலே சட்டென நினைவுக்கு வருவது கமல்ஹாசன் நடித்த மகாநதி படத்தின் பொங்கலோ பொங்கல் பாடல் தான்.. பொங்கலோ பொங்கல் என உற்சாகமாகத் தொடங்கும் வரியும் அதன் பின்னர் வரும் மேளம், நாதஸ்வரமும் என்றென்றும் ஒரு உற்சாகப்பாடல் தான். தொலைக்காட்சிகளில், கடைகளில், வீடுகளில் என பொங்கலுக்கு அந்த பாடல் இல்லாத இடமே இருக்காது. ஆனால் பொங்கல் என்றால் அந்த ஒரு பாடல் மட்டுமே இல்லை. 


 



 


 



 



 



 



 



 



 



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண