பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், திரையுலகப் பிரபலங்கள் தங்களது பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். 


தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்லாமல் உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களால் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. 10 நாட்களுக்கு முன்பாகவே வீட்டைப் புதுப்பித்து, பழைய பொருட்களை எல்லாம் ஒழித்து நேற்று போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனிடையே இன்றைய தினம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவே வீடுகளில் வண்ண கோலமிட்டு மக்கள் பொங்கலை வரவேற்றனர்.


தொடர்ந்து அதிகாலையிலேயே எழுந்து புனித நீராடி  புத்தாடை அணிந்து விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மண்பானைகளில் பொங்கலிட்டு படைத்து வழிபட்டனர்.  மஞ்சள் குழை, பனங்கிழங்கு, கரும்பு வைத்து பொங்கல் பொங்கி வந்தததும் “பொங்கலோ பொங்கல்” என உற்சாக குரலிட்டு மக்கள் பொங்கலை கொண்டாடி வரும் நிலையில், உறவினர்களுக்கும் பொங்கல் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.


இதனிடையே திரையுலகப் பிரபலங்களும் தங்களது பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டு அவர்களது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.