பிரபல பாலிவுட் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் - KK என பிரபலமாக அறியப்பட்டவர். அவருக்கு வயது 53. நேற்று இரவு கொல்கத்தாவில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கேற்றபோது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, வெங்கய்யா நாயுடு மற்றும் பிரபலங்கள், ரசிகர்கள் ஆகியோர் சமூக வலைதளங்களில் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 


இது தொடர்பாக பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “பாடகர் கிருஷ்ணகுமார் மறைவு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் தன்னுடைய பாடல்கள் மூலம் பல்வேறு விதமான உணர்ச்சிகளை திரையில் கொண்டு வந்தார்.அவரை எப்போதும் அவருடைய பாடல்கள் மூலம் நான் நினைவில் கொள்வோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” எனப் பதிவிட்டிருந்தார். 






பாலிவுட் பாடகி ஸ்ரேயா கோஷல்,”என்னால் இந்த செய்தியை ஏற்று கொள்ளவே முடியவில்லை.என்னுடைய இதயம் துண்டு துண்டாக உடைந்துள்ளது” எனப் பதிவிட்டுள்ளார். 






மற்றொரு பாலிவுட் பாடகர் விஷால் தத்லானி, “என்னுடைய கண்களிலிருந்து கண்ணீர் நிற்கவே இல்லை. அவர் ஒரு அற்புதமான பாடகர், அற்புதமான மனிதர்” எனப் பதிவிட்டுள்ளார். 






இதேபோல் பல பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை பதிவிட்டுள்ளனர். 






இவ்வாறு பலரும் தங்களுடைய இரங்கலை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர்.


பாடகர் ஸ்ரீனிவாஸ் :








மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண