தனக்கு கொரோனா தொற்று இல்லை எனவும், புரளி பரப்பவேண்டாம் எனவும் பாடகி சின்மயி தனது Whatsapp ஸ்டேட்டஸ் வழியாகத் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்திருக்கும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை இந்தியாவையும் சிறை பிடிக்க ஆரம்பித்துள்ளது. இன்றைய காலை நிலவரப்படி 1,68,063 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
ஒமிக்ரான் தொற்றும் 4,000க்கும் மேற்பட்டோருக்கு பரவியுள்ளது. இதனால் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் அனைத்து தனியார் நிறுவனங்களையும் மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நேற்று ஒரேநாளில் 13,990 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு என தமிழ்நாடு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சாதாரண மக்கள் மட்டுமின்றி குஷ்பு, சத்யராஜ், மீனா, அருண் விஜய், விஷ்ணு விஷால், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்தவர்களுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
இந்தச் சூழலில் பாடகி சின்மயிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து அவர் தனது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில், “எனக்கு கொரோனா என்று எப்போ சொன்னேன். எனக்கு கோவிட் இல்லை.
சின்மயிக்கு கொரோனா என்று புரளி கிளப்ப வேண்டியது. அனைவரும் வீட்டிலேயே இருங்கள். பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ளுங்கள். வதந்தியையும், வைரஸையும் பரப்பாமல் இருங்கள்” என கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Actor Sathyaraj Corona Positive | நடிகர் சத்யராஜ் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதி.. பிரார்த்திக்கும் ரசிகர்கள்..
கமிஷன் கிடைப்பதால் பொங்கல் பரிசு பொருட்கள் வடமாநிலத்தில் இருந்து இறக்குமதி - ஈபிஎஸ் குற்றச்சாட்டு