இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பிசாசு’.  மிரட்டும் ஹாரர் படங்களுக்கு மத்தியில் காதல் காட்சிகளை புகுத்தி வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியிருந்த பிசாசு திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள். மேலும் அறிமுக நடிகர்களை வைத்து படத்தை உருவாக்கியிருந்ததால் இயக்குநர் மிஸ்கினை திரைத்துறையினரே பாராட்டினர். இந்நிலையில்  படத்தின் அடுத்த பாகத்தை இயக்குநர் மிஸ்கின் இயக்கி வருகிறார். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகும் இந்த படத்தை ராக்ஃபோர்ட் எண்டர்டைன்மெண்ட் தயாரித்து வருகிறது. கார்த்திக் ராஜா பிசாசு 2 படத்திற்கு இசையமைக்கிறார்.  இந்நிலையில் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் , எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் பிசாசு 2 இன் ஃபஸ்ட் லுக் போஸ்டரை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். பஸ்ட்லுக் போஸ்டரில்  பெண் ஒருவர் பாத் டப்பில் படுத்துக்கொண்டு , சிகெரெட் புகைப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் தற்போது ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவி வருகிறது,


 






பிசாசு 2 படத்தில் நடிகை  ஆண்ட்ரியா லீட் ரோலில் நடிக்கிறார். இவரை தவிர  நடிகை பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட நடிகர்களும் நடித்து வருகின்றனர்.. நடிகை நமீதா கிருஷ்ணமூர்த்தியும் முக்கியமான கதாபாத்திரத்தில் கமிட்டாகியுள்ளார்.  இந்நிலையில் மக்கள் செல்வன்  நடிகர் விஜய் சேதுபதியும் கூட   பேய் ஓட்டும் கெஸ்ட் ரோலில்  நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகின. பிசாசு 2 இல் நடிகை ஆண்ட்ரியா ஆடைகள் இன்றி சில சீன்ஸில் நடித்துள்ளாராம். சில ஆண்டுகளுக்கு முன்பு ஆடைகள் இன்றி நடிக்க தயார் என கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில்  ஆண்ட்ரியா பேசிய வீடியோ இணையத்தில் வைரலானதும் குறிப்பிடத்தக்கது. தற்போது  கதைக்கான தேவை இருப்பதால்தான்  ஆடைகளின்றி நடித்துள்ளாராம். பிசாசு முதல் பாகம் எப்படி ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்ததோ அதேபோல பிசாசு இரண்டாம் பாகமும் ரசிகர்களுக்கு மாறுபட்ட அனுபவத்தை கொடுக்கும் என்கிறார் இயக்குநர் மிஸ்கின். படம்  எப்போதோ தயாராகியிருக்க வேண்டும் ஆனால் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பாதிக்கப்பட்ட படங்களுள் பிசாசு இரண்டாம் பாகமும் ஒன்று. பிசாசு 2 அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.




தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்துடன் பயணிப்பவர் மிஷ்கின். இவர் சில படங்களில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இவர் இயக்கத்தில் வெளியான அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் , துப்பறிவாளன் உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இறுதியாக உதயநிதி ஸ்டாலினை வைத்து ‘சைக்கோ’ என்ற படத்தை இயக்கியிருந்தார். அந்த படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்களின் தேர்வு ரசிகர்களை கொண்டாட வைத்தது. அதேபோல பிசாசு 2 திரைப்படமும் அவருக்கு வெற்றிப்படமாக அமைய வாழ்த்துக்கள்.