சென்னையின் மிக முக்கியப்பகுதியாக உள்ள அசோக் நகரில் உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன் என 4 ஸ்கிரீன்களுடன் கடந்த 1983 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தியேட்டர் உதயம் தியேட்டர் என்ற மக்கள் மத்தியில் பரீட்சயமானது.


இடிக்கப்படும் உதயம்:


சென்னை மட்டுமல்லாது வெளியூரில் இருந்து வரும் மக்களுக்கு பட்ஜெட்டுக்கு ஏற்ற தியேட்டராகவும் திகழ்ந்தது. உண்மையில் இந்த தியேட்டரால் ஏழை, எளிய மக்கள் சினிமா பார்க்கும் கனவு நிஜமானது என்பதே உண்மை.


பொதுவாக தமிழ்நாட்டில் எந்த ஊருக்கு சென்றாலும் அங்கிருக்கும் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக தியேட்டர்கள் திகழ்கின்றன. உணர்வுகளால் நம்மை கட்டிப்போட்ட பங்கு அந்த 3 மணி நேர காட்சிகளுக்கு உண்டு. அப்படிப்பட்ட தியேட்டர்கள் காலப்போக்கிற்கு ஏற்றவாறு அப்டேட் வெர்ஷனாக மாற்றப்பட்டாலும், பல பிரபல தியேட்டர்கள் திருமண மண்டபம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஆக கட்டப்பட்டது சோகத்திலும் சோகமான நிகழ்வு தான். 


இதயத்தோடு நெருங்கிய உதயம்:


இப்படியான நிலையில் சென்னையின் முக்கிய அடையாளமாக கருதப்படும் உதயம் தியேட்டர் மூடப்படுவதாக தகவல் வெளியாகி திரையுலக ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சினிமா ரசிகர்களும் கூட இந்த தகவலால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  இந்நிலையில் இயக்குனர் பேரரசு இது குறித்து தெரிவித்துள்ளதாவது: 


”நான் சென்னையில் முதன்முதலாக படம் பார்த்த தியேட்டர் 'உதயம்'. பார்த்த படம் ரஜினி நடித்த படிக்காதவன். அதனை தொடர்ந்து பாண்டியராஜன் நடித்த ஆண் பாவம். அதன் பிறகு உதவி இயக்குனராக பணியாற்றிய காலகட்டங்களில் நாயகன் உட்பட அதிகப்படியான படங்களை பார்த்தது உதயம் தியேட்டரில்தான். நான் இயக்கிய சிவகாசி, தர்மபுரி, திருவண்ணாமலை, பழனி, திருத்தணி போன்ற அனைத்து படங்களும் உதயத்தில்தான் ரிலீஸ் ஆனது.


என் இதயத்தோடு சம்பந்தப்பட்டது உதயம். இன்று உதயம் தியேட்டர் இடிக்கப்பட போவதாக வந்த செய்தியால் இதயம் இடிபட்டது.ஏதோ மனம் கனத்துப் போனது.


உன் வெண்திரையில் எத்தனையோ காதல் படங்கள் ஓடியிருக்கும்,,


இன்று எங்கள் மனத்திரையில் நீயே காதலாய் ஓடிக்கொண்டிருக்கிறாய்...
சூரிய உதயத்திற்குத்தான் அஸ்தமனமென்றால்,
தியேட்டர் உதயத்திற்கும் அஸ்தமனமா?
சென்னை என்றதுமே ஒருசில இடங்களை வாழ்க்கையில் மறக்கவே முடியாது.


அதில் முக்கியமான ஒன்று உதயம் தியேட்டர் 
உதயமே! உன்மீது எந்தக் கட்டிடம் வந்தாலும் எங்கள் கண்ணுக்கு நீதான் அழியாத ஓவியமாய் தெரிவாய்..” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க 


Selvaraghavan: மம்மூட்டியைப் பார்த்து பிரமித்துப் போன செல்வராகவன்.. என்ன சொல்லி இருக்கார் பாருங்க!


Jayam Ravi: விஜய்யின் அரசியல் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பீர்களா? நடிகர் ஜெயம் ரவி பரபரப்பு பதில்