ஃபேஸ்புக் மேசஞ்சர் மூலம் ஆபாச புகைப்படங்கள் வந்ததாக செய்திகள் வந்ததையடுத்து நடிகர் பாயல் சர்க்கார் சைபர் கிரைம் பிரிவு மற்றும் பராக்பூர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலம் தனக்கு சில தவறான படங்கள் வந்ததாகவும், ஆபாச வெப் சீரிஸிலும் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும் பாராநகரில் வசிக்கும் நடிகை பாயல் சர்க்கார் கூறியுள்ளார். அவர் அந்த ஃபேஸ்புக் அக்கவுண்ட் குறித்த தகவல்களை அளித்த போது, அது போலி அக்கவுண்ட் என்று தெரிய வந்தது. அதில் கொடுக்கப்பட்டுள்ள நபரின் விபரங்களும் போலியானதாக இருந்தது. அவருக்கு அனுப்பப்பட்ட புகைப்படமும் விரைவில் டெலிட் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், அந்த போலி அக்கவுண்ட் வைத்திருந்தவர் செய்தியை நீக்குவதற்கு முன்பு அவர் நீக்குவார் என்று யூகித்த நடிகை பாயல் சர்க்கார் அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்திருந்தார். "பார்ன் சீரிசில் நடிப்பதற்காக வாய்ப்பு என்று வந்த மெஸேஜை கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். நான் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக இந்தத் துறையில் இருக்கிறேன், எது உண்மையான பட வாய்ப்பு, எது நமக்கு பொறி வைக்கும் மெசேஜ் என்று எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் புதிதாக தொழிலுக்கு வருபவர்கள் எளிதில் இதில் ஏமார்ந்து விடுவார்கள். போலீஸ் விசாரணையில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது, இவை அனைத்திற்கும் பின்னால் உள்ள நபர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று நம்புகிறேன்,” என்று நடிகை பாயல் சர்க்கார் கூறினார்.
பாயல் இதுபோன்ற ஆன்லைன் முறைகேடுகளை எதிர்கொள்வது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு டோலிவுட் இயக்குனர் ரவி கினகியின் போலி கணக்கில் இருந்து அவருக்கு அநாகரீகமான மெசேஜ் வந்தது என்பது அனைவரும் அறிந்தது. போலி சுயவிவரத்தின் பின்னால் மறைந்திருக்கும் அநாமதேய பயனர், நடிகைக்கு நடிப்பு வாய்ப்பை வழங்குவதாகக் கவர முயன்றார்.