பிக்பாஸ் சீசன் 3  நிகழ்ச்சியில் 3ம் இடத்தை பிடித்தவர் லாஸ்லியா. அவர் தற்போது சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


பிக்பாஸ் தமிழ் 5 நிகழ்ச்சியை அடுத்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்களையும், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இடையே, அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தபோது மட்டும் ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். இந்நிலையில், அடுத்தடுத்து படங்களில் நடிக்க இருப்பதால், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகினார். அவருக்கு பதில், நடிகர் சிம்பு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவருகிறார்.


அண்மையில், பிக்பாஸ் சீசன் 3 புகழ் லாஸ்லியா வைல்ட்கார்ட் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் அதிகாரப்பூர்வமாக நுழையப் போகிறார் என்ற செய்தி பரவியது. ஆனால் லாஸ்லியா தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒரு ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்க வருகிறார் என்று கூறப்பட்டுள்ளது.


பிக்பாஸால் புகழின் உச்சிக்குச் சென்ற லாஸ்லியா..


சீரியல்களில் சிலவற்றிலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குப் பெற்றதன் மூலம் பிரபலமானவர் நடிகர் கவின். பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 யில்  பங்குபெற்ற இவருக்கும், அந்த நிகழ்ச்சியில் பெற்ற இலங்கை தொகுப்பாளினி லாஸ்லியாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக சொல்லப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் கவின் லாஸ்லியா ஆர்மியும் உருவானது.  ஆனால் அந்த சீசன் முடிவடைந்த பின்னர் இருவரும் தங்களது வழிகளை பார்த்து சென்றுவிட்டனர். ஆமா, அந்தக் காதல் என்ன ஆனது என்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இருவர் தரப்பில் இருந்தும் எந்தப்பதிலும் இல்லை.


சினிமாவில் பிஸியான லாஸ்லியா..


இந்நிலையில் கவினும் சினிமாவில் பிஸியாக உள்ளார். அஜித் படம் வரை அவர் கமிட் ஆகிவிட்டார். அதேபோல் லாஸ்லியாவும்  பிக்பாஸ் முடிந்த கையோடு படங்கள் கமிட்டாகினார். அது மட்டுமல்லாமல் நிறைய போட்டோ ஷுட்டும் நடத்தினார். வழக்கமான புஸ்புஸ் உடல்வாகை மாற்றி, சற்றே மெலிந்து தலை முடியை கட் செய்து ஆளே மாறிவிட்டார்.
அர்ஜுன்-சதீஷுடன் ஃபிரண்ட்ஷிப் என்ற படம் நடித்திருந்தார், தற்போது கூகுள் குட்டப்பா என்ற படத்தில் நடித்திருக்கிறார், விரைவில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது.


இலங்கை தமிழ் பெண்ணாக சினிமாவில் அறிமுகமாகி பின்னர் பிக்பாஸ் சீசன் 3 காரணமாக பாப்புலாரிட்டி பெற்று அதிகமான படங்களில் பெற்றவர், தற்போது ரியாலிட்டி ஷோவில் கலக்க ஆயத்தமாகி இருக்கிறார். லாஸ்லியாவுக்கான வரவேற்பு எப்படி இருக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.