2024ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலில் ஆந்திர பிரதேச தொகுதியில் போட்டியிட்ட தெலுங்கு நடிகரும் ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், பிட்டாபுரம் சட்டமன்ற தொகுதியில் வலுவான வெற்றியை தன்னுடைய முதல் தேர்தலிலேயே பெற்றுள்ளார். அவரின் இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் அவரது மூன்றாவது மனைவி அன்னா லெஷ்னேவா கணவர் பவன் கல்யானை வரவேற்ற வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
பவன் கல்யாண் சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடி வீட்டுக்கு வந்த போது அவரது மனைவி அன்னா லெஷ்னேவா ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகமிட்டு வரவேற்றார். அருகில் பவன் கல்யாண் மகன் அகிரா நந்தன் உடன் நிற்கிறார். பவன் கல்யாண் அரசியல் வாழ்க்கையில் அன்னாவின் அசைக்க முடியாத ஆதரவை என்றுமே அளித்துள்ளார்.
ரஷ்ய மாடலும் நடிகையமான அன்னா லெஷ்னேவா, பவன் கல்யாணின் மூன்றாவது மனைவியாவார். அவர்கள் இருவருக்கும் 2011ம் ஆண்டு 'தீன் மா' படப்பிடிப்பின் போது நட்பு ஏற்பட்டது. பின்னர் இருவரும் இரண்டு ஆண்டுகளுக்கு டேட்டிங் செய்த பின்னர் 2013ம் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு மார்க் ஷங்கர் பவோனோவிச் என்ற ஆண் குழந்தை உள்ளது.
அன்னா லெஷ்னேவா ஏற்கனவே திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றவர். அவருக்கு பொலேனா அஞ்சனா பவோனோவா என்ற ஒரு மகள் இருக்கிறார். பவன் கல்யாண் தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் சேர்த்து அன்னாவின் மகளையும் வளர்த்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அன்னா லெஷ்னேவாவுக்கும் பவன் கல்யாணுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக சில வதந்திகள் பரவி வந்தன. நடிகர் வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதியின் நிச்சயதார்த்த விழா மற்றும் ராம் சரண் மற்றும் உபாசனாவின் மகள் க்ளின் காரா கொனிடேலாவின் தொட்டில் போடும் விழாவில் அன்னா கலந்து கொள்ளாதது தான் இந்த வதந்திகளுக்கு முக்கியமான காரணமாக சொல்லப்படுகிறது.
பவர் ஸ்டார் என கொண்டாடப்படுபவர் நடிகர் பவன் கல்யாண். 2013ம் ஆண்டின் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் பட்டியலில் டாப் 100 இடங்களில் இடம்பெற்று இருந்தார். பின்னர் அரசியலில் முழுமையாக கவனம் செலுத்த இருப்பதால் சினிமாவில் இனி நடிக்க போவதில்லை என தெரிவித்தார். இருப்பினும் 2021ம் ஆண்டு வெளியான 'வக்கீல் சாப்' படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பையும் முதல் வாரத்திலேயே 100 கோடி வசூலையும் ஈட்டி சாதனை படைத்தது. இது அவருடைய ரசிகர்கள் அவர் மீது வைத்து இருக்கும் அளவுகடந்த அன்பை குறிக்கிறது.