பவண் கல்யாண் நடித்து சுஜீத் இயக்கியுள்ள ஓஜி திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. டிவிடி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்தில் இம்ரான் ஹாஷ்மி, பிரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ், ஸ்ரீயா ரெட்டி மற்றும் பிரகாஷ் ராஜ் இதில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.தமன் இசையமைத்துள்ளார். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் முதல் நாளில் வசூலில் உச்சம் தொட்டுள்ளது ஓஜி .
ஓஜி முதல் நாள் வசூல்
தமிழ் , தெலுங்கு , இந்தி , மலையாளம் , கன்னட ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் 4500 திரைகளில் வெளியானது ஓஜி திரைப்படம் . தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த மட்டுமில்லாமல் வெளி நாடுகளிலும் படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது . குறிப்பாக வட அமெரிக்காவில் முன்பதிவில் மட்டும் 54 ஆயிரம் டிக்கெட்கள் படத்திற்கு விற்பனையாகின. இதனால் படத்தின் வசூல் உச்சம் தொட்டுள்ளது
முதல் நாளில் ஓஜி திரைப்படம் உலகளவில் ரூ 150 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிறப்பு திரையிடலில் மட்டுமே படம் 60 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழில் ரஜினி நடித்து சமீபத்தில் வெளியான கூலி திரைப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ 151 கோடி வசூல் ஈட்டியது. அதேபோல் விஜயின் லியோ திரைப்படம் ரூ 148 கோடி வசூலித்திருந்தது. தற்போது இரு படங்களின் சாதனையையு பவன் கல்யாணின் ஓஜி திரைப்படத்தின் வசூல் முந்தியுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
ஓஜி விமர்சனம்
வழக்கமான ஆக்ஷன் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியுள்ள ஓஜி திரைப்படம் பவன் கல்யாண் ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் மாஸ் காட்சிகளை கொண்டிருக்கிறது. குறிப்பாக இதுவரை இல்லாத அளவு மாஸான தோற்றத்தில் பவன் கல்யாண் இந்த படத்தில் காட்டப்பட்டிருக்கிறார் என விமர்சகர்கள் பலரும் கூறியுள்ளார்கள். பவன் கல்யாணின் ஓப்பனிங் மற்றும் இடைவேளை காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன . தமனின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக உள்ளது. ஒன்றன் பின் ஒன்று என மாஸ் காட்சிகள் அடுக்கப்பட்டிருந்தாலும் படத்தில் உணர்ச்சிகரமான ஒட்டுதல் பார்வையாளர்களுக்கு கிடைக்காதது படத்தின் மிகப்பெரிய மைனஸ். பல்வேறு கதாபாத்திரங்கள் படத்தில் இடம்பெற்றிருப்பது குழப்பதை ஏற்படுத்துகிறது. மொத்தத்தில் ஓஜி சுமாரான கதை மற்றும் திரைக்கதை ஆனால் பவன் கல்யாண் ரசிகர்களுக்கு விருந்து