சாய் தரம் தேஜ் இன்னமும் கண் திறக்கவில்லை என்றும், கோமாவில் தான் இருப்பதாகவும் தெலுங்கு நடிகர் பவன்கல்யாண் தெரிவித்துள்ளார். பவனின் இந்த தகவல், மருத்துவமனையின் அறிக்கைக்கு நேர் எதிராக இருப்பதாக ரசிகர்கள் குழம்பிப் போயுள்ளனர்


இருசக்கர வாகன விபத்தில் படுகாயமடைந்த தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் தற்போது ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஐதராபாத்தின் முக்கியப் பகுதியான மாதாப்பூர் பாலத்துக்கு அருகே சாய் தரம் தேஜ் சென்ற இருசக்கர வண்டி நிலைதடுமாறிச் சரிந்து விபத்துக்குள்ளானது. ஹெல்மெட் அணிந்திருந்ததால் தலையில் எதுவும் பலத்த அடிபடவில்லை என்றாலும் வண்டி நிலைதடுமாறியதால் சாய் தரம் தேஜின் உடலில் மற்ற பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. விபத்து குறித்த தகவல் வெளியானதுமே, சாய் தரம் தேஜின் சகோதரர் வைஷ்ணவ் தேஜ், மாமா பவன்கல்யாண், உறவினர்கள் வருண் தேஜ், நிஹாரிகா கொனிடேலா, நண்பர்  சுன்தீப் கிஷன் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்தனர். அல்லு அரவிந்த் மற்றும் சிரஞ்சீவியின் மனைவி சுரேகாவும் மருத்துவமனைக்கு விரைந்தனர். 




விபத்து குறித்து சாய் தரம் தேஜ் தரப்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், விபத்தில் சிக்கிய சாய் தரம் தேஜ் நன்றாக இருக்கிறார். உடல் நலம் தேறி வருகிறார். மருத்துவமனையில் முன்னெச்சரிக்கையாக கண்காணிப்பில் இருக்கிறார். யாரும் கவலைப்படத் தேவையில்லை. உடல்நிலை இன்னும் கொஞ்சம் சீராக வேண்டியே அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சைகள் நடந்து வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.


விபத்தால் பதறிப்போன ரசிகர்கள் மருத்துவமனையில் அறிக்கைக்கு பிறகு அமைதியாகினர். ஆனால் சாய் தரம் தேஜ் இன்னமும் கண் திறக்கவில்லை என்றும், கோமாவில் தான் இருப்பதாகவும் தெலுங்கு நடிகர் பவன்கல்யாண் தெரிவித்துள்ளார். ராம் நடித்த ரிபப்ளிக் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட பவன்கல்யாண், '' பொதுவாக நான் உறவினர்களின் பட விழாக்களில் பங்கேற்பதில்லை. அவர்களை சுதந்திரமாக விட்டுவிடுவேன். ஆனால் இந்த விழாவுக்கு நான் வந்த காரணம் வேறு. ராம் தரம் தேஜ் தற்போது மருத்துவமனையில் உள்ளார். அவர் இன்றும் கோமாவில் தான் இருக்கிறார். இதுவரை கண் திறக்கவில்லை. என்றார். மேலும் பேசிய அவர், '' அவர் 45கிமீ வேகத்திலேயே பைக்கில் சென்றார். ஒரு ஆட்டோவை கடந்து செல்லும் போதே விபத்து ஏற்பட்டது. அது ஒரு துரதிஷ்டவசமான விஷயம். ஆனால் அதிவேகத்தில் சென்றதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விபத்திலும் அரசியல் செய்யப்படுகிறது என்றார்.


Rocketry Release Date | மாதவனின் 'ராக்கெட்ரி' : ரீலில் வரவிருக்கும் ரியல் கதை.. ரிலீஸ் தேதி அறிவிப்பு!