Pathu thala: ‘பத்து தல’ படத்துக்காக சிம்பு செய்யும் காரியம் - அப்டேட் கொடுத்த இயக்குநர்
Pathu thala : சிலம்பரசன் கதாநாயகனாகவும், பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடிக்கவுள்ளனர்.இப்படத்தில் கெளதம் கார்திக்கும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநாடு படத்திற்கு பின் நடிகர் சிம்பு ”பத்து தல” படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் டிசம்பர் 14 அன்று வெளியாகும் என ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு (Studio Green productions) நிறுவனம் முன்னதாகவே அறிவித்த நிலையில் தற்போது புதிய அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
நீண்ட இடைவேளைக்கு பின், பத்து தல படக் குழுவினர் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர். இப்படத்தில் சிலம்பரசன் (Silambarasan) கதாநாயகனாகவும், ப்ரியா பவானி சங்கர் (Priya bhavani Shankar) கதாநாயகியாகவும் நடிக்கவுள்ளனர். இப்படத்தில் கெளதம் கார்த்திக்கும்(Gautham Karthik) முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Just In




இப்படக்குழுவினர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி அரண்மனையில் வரும் ஜூலை 28 ஆம் தேதி படப்பிடிப்பை துவங்குவதாக தகவல் வெளியாகிவுள்ளது.
இதுகுறித்து இயக்குநர் ஒபிலி கிருஷ்ணா பேசுகையில், “நடிகர் சிம்புவை வைத்து சில காட்சிகளை நாங்கள் ஷூட் செய்துவிட்டோம். படத்தின் முக்கியமான காட்சிகளை இனி வரும் நாட்களில் ஷூட் செய்ய திட்டமிட்டுள்ளோம்.” எனக் கூறியுள்ளார்.
சில்லுனு ஒரு காதல் இயக்குநரான, கிருஷ்ணா கூறியதாவது :
“இப்படத்தை ஷுட் செய்ய பெரிய இடம் தேவைப்பட்டது. அதற்காக பல இடங்களில் தேடினோம். இறுதியில் பெல்லாரியில் உள்ள பேலஸை தேர்வு செய்தோம். இந்த ஷூட்டிங் ஸ்பாட்டில், பாடல் படப்பிடிப்பு மற்றும் சண்டை காட்சிகளை படம் பிடிக்க திட்டமிட்டுள்ளோம்.
பெல்லாரியில் 20 நாட்கள் ஷூட்டிங் முடிந்த பின்னர், திருசெந்தூரில் 10 நாட்கள் ஷூட்டிங் நடைபெறும். சென்னையில் 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்தவும் திட்டம் உள்ளது.
சிம்பு, ப்ரியா பவானி சங்கர், கெளதம் கார்த்திக் மட்டுமல்லாமல் கலையரசனும் மலையாள நடிகை அனு சித்ராவும் இப்படத்தில் உள்ளனர். சிம்பு நிச்சயமாக ஒரு சிறந்த நடிகர். இப்படத்தின் கேரக்டருக்காக சிம்பு சில முன் பயிற்சியையும் மேற்கொண்டுள்ளார். முஃப்தி படத்தை நாங்கள் ரீமேக் செய்யவில்லை. ஆனால், பத்து தல படத்தின் கதை அப்படத்தை தழுவி இருக்கும். நடிகர் கெளதம் கார்த்திக்கும் இப்படத்திற்காக மூன்று நாட்கள் பயிற்சியை மேற்கொண்டார்” எனப் பேசினார்.