சிம்பு நடிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த மார்ச் 30ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘பத்து தல’
கௌதம் கார்த்திக், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா பவானி சங்கர், சந்தோஷ் பிரதாப், அனு சித்தாரா கலையரசன், டீஜே, உள்ளிட்டோர் நடித்துள்ள் இந்த படம் கன்னடத்தில் வெளியான முஃப்டி படத்தின் ரீமேக்காகும்.
கலவையான விமர்சனங்கள்
ஸ்டுடியோ க்ரீன் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கன்னியாகுமரியில் நடைபெறும் மணல் மாஃபியாவை அடிப்படையாகக் கொண்டு பத்து தல படத்தின் கதை அமைந்துள்ளது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
ஏஜிஆர் எனும் கதாபாத்திரத்தில் ஒரு புறம் சிம்பு ரசிகர்களைக் கவர்ந்திருந்தாலும், கன்னட ஒரிஜினல் படம் அளவுக்கு பத்து தல படம் இல்லை என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
5 நாள் வசூல் நிலவரம்
இந்நிலையில் பத்து தல படம் முதல் நான்கு நாள்களில் இந்தியாவில் மட்டும் 13.5 கோடி வசூலை எட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதல் நாள் 5.25 கோடிகளும், இரண்டாம் நாள் 1.85 கோடி வசூலையும், மூன்றாம் நாள் 2.6 கோடி வசூலையும் நான்காம் நாள்2.9 கோடி வசூலையும், ஐந்தாம் நாள் 1 கோடி வசூலையும் பத்து தல படம் குவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பத்து தல படம், உலகம் முழுவதும் மொத்தம் 40 கோடிகளுக்கும் மேல் வசூலித்துள்ளது.
விடுதலை Vs பத்து தல
பத்து தல படம் தமிழ்நாட்டில் மட்டு 500 ஸ்க்ரீன்களில் வெளியான நிலையில், மார்ச் 31ஆம் தேதி வெளியான விடுதலை பாகம் 1 400 ஸ்க்ரீன்களில் வெளியானது.
இரண்டு படங்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், விடுதலை படம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று தொடர்ந்து பேசுபொருளாகி வருகிறது. மறுபுறம் பத்து தல படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், நல்ல வசூலைப் பெற்று வருகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை பாகம் 1 திரைப்படம் நான்காம் நாளான நேற்று நாடு முழுவதும் 1.90 கோடி ரூபாய் வசூலித்துள்ள்து.
விடுதலை படம் முதல் நாள் 3.85 கோடி 3.85 கோடி ரூபாயும், இரண்டாம் நாள் 3.8 கோடி ரூபாய் வசூலும், மூன்றாம் நாள் 5.05 கோடி ரூபாய் வசூலையும் நான்காம் நாள் 1.90 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தம் 40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட விடுதலை படம் உலக அளவில் 25 கோடிகளுக்கும் மேல் வசூலை அள்ளியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க: Kajal Agarwal : மதிப்பு, ஒழுக்கம் குறைவாக இருக்கும் இடம் எனக்கு தேவையில்லை... தென்னிந்திய சினிமா பற்றி காஜல் அகர்வால் சொன்ன கருத்து !