பாலிவுட் நடிகர்கள் ஷாரூக் கான், தீபிகா படுகோனே ஆகியோர் நடித்து பெரும் எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ள `பதான்’ திரைப்படத்தின் படங்களில் இருந்து லீக்காகியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. ஏற்கனவே மஞ்சள் நிற பிகினி உடை அணிந்திருந்த தீபிகா படுகோனேவின் படங்கள் இணையத்தில் வெளியாகியிருந்தன. இந்நிலையில் தற்போது புதிதாக இந்தப் படங்கள் வெளியாகி, வைரலாகியுள்ளன. 



`பதான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில், பால்கனியில் தீபிகா படுகோனே, ஷாரூக் கான் ஆகியோர் நின்றுகொண்டிருக்கும் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தங்களைப் படம் எடுப்பவர்களை நோக்கி நடுவிரலை உயர்த்திக் காட்டும் தீபிகா படுகோனேவுடன் அருகில் நிற்கும் ஷாரூக் கான் என இந்தப் படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.






ஸ்பெயின் நாட்டின் வீதிகளில் எடுக்கப்பட்ட மற்ற சில படங்களில், நடிகர் ஷாரூக்கான் புகைப்பிடித்துக் கொண்டிருந்த படங்கள் வெளியாகியுள்ளன. 



இயக்குநர் சித்தார்த் ஆனந்த் உருவாக்கி வரும் இந்த ஆக்‌ஷன் திரைப்படத்தில் ஷாரூக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரஹாம் ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த மார்ச் 2 அன்று, ஷாரூக்கான் `பதான்’ திரைப்படத்தின் டீசரை வெளியிட்டு அதுவும் வைரலாகியது. இந்தத் திரைப்படம் வரும் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 25 அன்று, இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.