ஜனவரி 25-ஆம் தேதியான இன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் 'பதான்' திரைப்படத்தின் அமோகமான டிக்கெட் விற்பனை விவரம் தற்போது வெளியாகியுள்ளது. 


ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடிப்பில். பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள 'பதான்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 



முதல் நாளே அடி தூள் :


செவ்வாய் கிழமையான இன்றைய நிலவரத்தின் படி நாளை வெளியாக இருக்கும் 'பதான்' படத்தின் 4.19 லட்சம் டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. முதல் நாள் காட்சிக்கே 80% இடங்கள் முழுவதுமாக புக்கிங் செய்யபட்டு விட்டது. இது வரையில் எந்த ஒரு பாலிவுட் திரைப்படத்திற்கும் கிடைக்காத ஒரு வரவேற்பு 'பதான்' படத்திற்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் காட்சி அதிகாலை 6 அல்லது 7 மணிக்கு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 






அமோகமான ஓப்பனிங் :


ஜனவரி 25ம் தேதியான இன்று 5000 திரைகளில் வெளியிடப்பட்டுள்ளது 'பதான்' திரைப்படம். கோவிட் தொற்று காரணமாக பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து சரிவை சந்தித்த  திரையுலகத்திற்கு 2023ம் ஆண்டு ஒரு சிறந்த ஓப்பனிங்கை கொடுத்துள்ளது பதான் திரைப்படம். மல்டிபிளக்ஸ்கள், சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்கள் மற்றும் தென்மாநிலங்களிலும் டிக்கெட்டு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 






கேஜிஎஃப் 2 சாதனையை முறியடிக்குமா ?


 'பதான்' திரைப்படம் முதல் நாளிலேயே ரூ.45 கோடி முதல் ரூ.50 கோடி வரை பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்து புதிய வரலாற்று சாதனையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு சர்வதேச அளவில் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமாக வெற்றி பெற்ற ‘கேஜிஎஃப் 2’ படத்தின் முந்தைய சாதனையை முறியடித்து ரூ.45 கோடி முதல் 50 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என்கிறார் INOX மல்டிபிளக்ஸ் தலைமை நிரலாக்க அதிகாரி ராஜேந்திர சிங் ஜயாலா. 


ஷாருக்கான் ஹீரோவாக ரீ என்ட்ரி :
 
2018ம் ஆண்டு வெளியான “ஜீரோ” படத்திற்குப் பிறகு ஷாருக்கான் மீண்டும் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இந்த 'பதான்'  திரைப்படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் இப்படம் வெளியாவதால் தொடர்ச்சியாக வார இறுதியும் சேர்த்து ஐந்து நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் கூடுதலாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.