ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடிப்பில். பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
'பதான்' படத்தின் 'பேஷ்ரம் ரங்' பாடல் வெளியானதில் இருந்து பல தரப்பிலும் இருந்து பல எதிர்ப்புகள் எழுந்தன. அதற்கு முக்கியமான காரணம் தீபிகா படுகோன் அந்த பாடலில் அணிதிருந்த காவி நிறத்திலான மிகவும் கிளாமரான பிகினி உடை. பதான் திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட கூடாது என பாய்க்காட் எல்லாம் நடைபெற்றது. இவை அனைத்தும் பதான் படத்தின் ரிலீஸை, வசூலை பாதிக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது நடப்பது தலைகீழாக உள்ளது. காரணம் பதான் படத்தின் ரிலீசுக்கு முன்னரே வசூலில் சாதனை படைத்து வருவதோடு டிக்கெட் முன்பதிவும் அமோகமாக நடைபெற்று வருகிறது. பதான் படத்தின் முதல் நாள் வசூல் தாறுமாறாக இருக்கப்போகிறது என்பது பாக்ஸ் ஆபிஸின் யூகம். பிளாக் பஸ்டர் ஹிட் படமான 'பாகுபலி' படத்தின் முதல் நாள் வசூல் 41 கொடியையும் முறியடிக்கும் பதான் திரைப்படம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பாலிவுட் கிங் கான் ஷாருக்கான் ஒரு ரகசிய உளவாளியாக நடித்துள்ள இப்படத்தில் ஜான் ஆபிரஹாம் வில்லனாக நடித்துள்ளார். ஒரு கம்ப்ளீட் ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இப்படத்திற்கு எதிர்பார்ப்பு மற்ற படங்களை விட அதிகமாக இருப்பதற்கு ஒரு முக்கியமான காரணம் 2018ம் ஆண்டிற்கு பிறகு ஷாருக்கானின் படம் ரீலீஸாவதுதான். கடந்த ஆண்டு பாலிவுட் படங்கள் எதுவும் பெரிய அளவில் வசூலில் சாதிக்கவில்லை என்பதால் இப்படத்தின் வசூலும் சர்ச்சைகளால் பாதிக்கப்படும் என்ற யூகம் தற்போது வெளியாகியுள்ள அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் நிலவரத்தை பார்த்த பிறகு தவிடு பொடியாகியுள்ளது.
வியாழக்கிழமையான நேற்றைய தகவலின் படி இந்திய அளவில் பதான் படத்தின் அட்வான்ஸ் புக்கிங் நிலவரம் :
#பிவிஆர் : 51,000
# ஐநாக்ஸ் : 38,500
# சினிபோலிஸ் : 27,500
மொத்தமாக 1,17,000 டிக்கெட்கள் விற்கப்பட்டுள்ளன. பாக்ஸ் ஆபிஸில் சுனாமி போல வசூல் அலை வீச போகிறது என்பதை அறிகுறி இப்போதே தெரிந்துவிட்டது. மேலும் அட்வான்ஸ் புக்கிங் இன்று முதல் முழுவீச்சில் நடைபெறவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னர் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன், கே.ஜி.எஃப் படங்களின் ஒட்டுமொத்த வசூலை அட்வான்ஸ் புக்கிங் மூலமே வசூலித்துவிட்டது பதான் என கூறப்படுகிறது.