நடிகர் பசுபதி அறிமுக இயக்குநர் ஒருவரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்குகிறார் பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமணன் தயாரிக்கிறார் பசுபதியுடன் நடிகர் ரோஹினி இந்தப் படத்தில் இணைந்து நடிக்கிறார்.
குறிப்பாக ரங்கன் வாத்தியார் கதாப்பாத்திரம் பெரிதும் வரவேற்கப்பட்டது. ஆர்யாவும் பசுபதியும் சைக்கிளில் டபுள்ஸ் அமர்ந்து செல்லும் காட்சி இன்ஸ்டாகிராம், பேஸ்புக், ட்விட்டர் என மீம்ஸ்களாக வைரலானது. நெட்டிசன்களின் வைரல் மீம்ஸ்களின் வரிசையில் அப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன், டான்சிங் ரோஸாக நடித்த ஷபீர், ’வேம்புலி’ ஜான் கொக்கன் என அவர்களும் தங்கள் பங்கிற்கு மீம்ஸ்களை தெறிக்கவிட்டுள்ளனர். வாத்தியார் மீம் டிரெண்டுக்கு அதிகாரப்பூர்வ நெட்ப்ளிக்ஸ் கணக்கும் சிக்கிக் கொண்டது. பசுபதி டெம்ளேட் டிரெண்டாவது வழக்கமானதுதான். இதற்குத்தான் அசைப்பட்டாயா பாலக்குமாரா, அசுரன், சார்பட்டா பரம்பரை என பசுபதி மீம்ஸ்கள் செம வைரல் ரகம். ஆனால், வெறும் மீம் டெம்ளேட்டாக கடந்து போக முடியாதபடி நடிகர் பசுபதி பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மீம்ஸ்கள் ஆக்கிரப்பதற்கு முன்பே, திருப்பாச்சி ‘பட்டாசு பாலு’, தூள் ‘ஆதி’, வெடிகுண்டு முருகேசன் போன்ற கதாப்பாத்திரங்களிலும் வெயில், மஜா, குசேலன், விருமாண்டி போன்ற படங்களில் சிறந்த குணசித்திர நடிகராகவும் பசுபதி அனைவருக்கும் பரிச்சயம்.
இதற்கிடையேதான் தற்போது அறிமுக இயக்குநர் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர் பசுபதி.