புதுக்கோட்டை மாவட்டத்தை அறந்தாங்கி அடுத்த இடையர் கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் என்ற ராஜா. இவர் சுபநிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்களில் நிகழ்ச்சிகளை, மொத்தமாக கான்ட்ராக்ட் எடுத்து வேலைகளை முடித்துக் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.  பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வேலைக்கு வரும் பெண்களை தவறான வழிக்கு அழைத்தாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் திருமண நிகழ்ச்சியில் வரவேற்பு செய்யும், பணியில் பங்கேற்றும் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறியதாக சொல்லப்படுகிறது. 



இவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அமரவாதிபுதூர் பகுதிக்கு அழைத்து சரமாரியாக அடித்துள்ளனர். அந்த வீடியோ  சமூக வலைதளங்களில் பரவியது. இதனிடையே ராஜா சாக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தன்னை தாக்கி சிலர் பணத்தை பறித்துக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார். ராஜாவுக்கு காரைக்குடியை சேர்ந்த காவலர் ஒருவர் உதவி செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து சிவகங்கை மாவட்ட காவல்துறை எஸ்.பி, காரைக்குடி டி.எஸ்.யை விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளார். இது குறித்த விசாரணை நடைபெற்றது. தஞ்சாவூரை சேர்ந்த  பெண் ஒருவர், தலைமைச் செயலக தனிப்பிரிவுக்கு அளித்த புகார் மனு மீது சாக்கோட்டை காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

 

மனுதாரரை நேரில் விசாரித்த வகையில் தான் திருமணம் மற்றும் பிற சுப நிகழ்ச்சிகளில் வரவேற்பு பெண்ணாக பணியாற்றி வருவதாகவும், சுமார் 10 மாதங்களுக்கு முன்பு தன்னுடைய தோழியின் மூலம் அறிமுகமான   ராஜா என்பவர் அழைத்திருந்த சுப நிகழ்ச்சிக்கு சாக்கோட்டை அருகில் புதுவயல் கிராமத்திற்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.



சிவகங்கை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - சிவகங்கை : 16-ஆம் நூற்றாண்டு நவகண்ட சிற்பம் கண்டுபிடிப்பு..!

நிகழ்ச்சி முடிந்த பிறகு அங்கு அருகில் உள்ள ஒரு விடுதியில் தானும் மற்றும் பிற தோழிகளும் தங்கியதாகவும். மேற்படி ராஜா தன் பெண்மையை இழிவுபடுத்தும் விதமாக பேசியதாகவும், முறைகேடான செயல்களுக்கு தூண்டியதாகவும் புகார் தெரிவித்துள்ளார். இதன்படி சாக்கோட்டை காவல்நிலையத்தில் சட்ட பிரிவுகள் 354(A)(ii), 506(i) IPC, 4 of TNPHW act and 5(1)(a)and (b) of IT Act. ன் படி ராஜா மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.