Paruthiveeran: அவசியம் தேவைப்பட்டால் அமீரின் காலை கழுவி குடிப்பியா என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை கரு பழனியப்பன் வெளுத்து வாங்கியுள்ளார்.
கார்த்தி, பிரியாமணி நடிப்பில் வெளிவந்த பருத்தி வீரன் படம் ரிலீசாகி 16 ஆண்டுகளை கடந்த பின்பும் அதன் மீதான சர்ச்சை இன்றும் ஓயந்தபாடில்லை. கிராமத்து கதைகளத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற பருத்தி வீரன் படத்தால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் இயக்குநர் அமீர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் உருவான பருத்தி வீரன் தனக்கு ரூ.2 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறியிருந்தார். அதேநேரம் அமீர் கொடுத்த வார்த்தையை மீறி படம் முடிப்பதற்கான காலக்கெடுவை அதிகரித்துள்ளதாக ஞானவேல் ராஜா குற்றம்சாட்டி இர்நுதார். இது மட்டும் இல்லாமல், அமீர் பொய் கணக்கு கொடுத்து தன்னை ஏமாற்றி விட்டதாகவும், அவர் ஒரு திருடன் என்றும் விமர்சித்திருந்தார். இதனால் பருத்தி வீரன் சர்ச்சை பூதாகரமாக வெடித்தது.
இந்த சம்பவத்தில் அமீருக்கு ஆதரவாக இயக்குநர் சமுத்திக்கனி, கரு பழனியப்பன், பொன்வண்ணன், சினேகன், பாரதிராஜா என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இதனால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுருந்தார். ஆனாலும், ஞானவேல்ராஜாவின் வருத்தம் போலியானது என்றும், அதற்காக உண்மையை பலி கொடுக்க முடியாது என்றும் சசிகுமார் மீண்டும் விமர்சித்துள்ளார்.
இதேபோல் கரு பழனியப்பனும் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக பேசியுள்ளார். ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த கரு பழனியப்பன், ஞானவேல் ராஜாவின் திமிர் பேச்சுக்கு பின்னால் சூர்யாவின் குடும்பம் இருப்பதாக சந்தேகம் உள்ளது என கூறியுள்ளார். “ஞானவேல் சுயமாக எதுவும் பேசவில்லை. அவரது பின்னால் சிலர் உள்ளனர். சிவக்குமார் கூறி தான் ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்டுள்ளார். ஞானவேல் ராஜாவுக்கும், அமீருக்கும் பிரச்சனை இல்லை. பிரச்சனையே சிவக்குமார் குடும்பத்துக்கும், அமீருக்கும் தான் பிரச்சனை உள்ளது.
அமீரால் யாருக்கும் பிரயோஜனம் இல்லை என ஞானவேல் ராஜா கூறுகிறார். அப்போ அமீரால் பிரயோஜனம் இருந்தால் அவர் காலை கழுவி குடிக்கலாமா...? எது உண்மையோ அதன் பக்கம் நிற்க வேண்டும். இவ்வளவு வெற்றிப்பிறகு பணம், புகழ் எல்லாமே உங்களுக்கு வந்து விட்டது, ஆனால் அவரை ஏன் இழிவாக நடத்த வேண்டும். சூர்யா குடும்பம் ஏன் ஞானவேல் ராஜாவை காப்பாற்ற வேண்டும்?” என ஆவேசமாக கரு பழனியப்பன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் படிக்க: Paruthiveeran: 'இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது’ - ஞானவேல் ராஜாவை சரமாரியாக சாடிய சமுத்திரக்கனி!