தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான இயக்குனர் புதுமை விரும்பி, புதுமை புகுத்தி என கூறப்படுபவர் இயக்குனர் பார்த்திபன் ராதாகிருஷ்ணன். புது முயற்சிகளை செயல்படுத்துவதில் ஆர்வம்கொண்ட ஒரு கலைஞன். சினிமாவில் நடிகனாக வேண்டும் என்ற தீராத ஆசையால் வந்தாலும் முதலில் அவர் அடியெடுத்து வைத்து கே. பாக்யராஜின் உதவி இயக்குநராக சேர்ந்து பின்னர் இயக்குநரானவர். 



ஆஸ்கார் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றது:


இயக்கம் மட்டுமின்றி நடிப்பிலும் சிறந்து விளங்கியவர் பார்த்திபன் ராதாகிருஷ்ணன். ஏராளமான திரைப்படத்தை இயக்கியுள்ள பார்த்திபன் 'ஒத்த செருப்பு' என்ற திரைப்படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து ஏராளமான விருதுகளையும் குவித்தார். அந்த வகையில் சமீபத்தில் அவர் இயக்கி நடித்த 'இரவின் நிழல்' திரைப்படம் உலகின் முதல் நான்- லீனியர் திரைக்கதை கொண்டு ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட ஒரு திரைப்படமாகும். இந்த சிறப்பு வாய்ந்த திரைப்படம் 2023-ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுகளுக்கான நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 






அறிவு மட்டுமே செலவு.. கோடிகள் இல்லை :


இரவின் நிழல் ஆஸ்கார் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டது மிகவும் பெருமையான விஷயம், அது ஒரு சாதனை. இரவின் நிழல் படத்துடன் ஆஸ்கார் விருதுக்கு நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆர்.ஆர்.ஆர், கங்குபாய் கத்தியவாடி, காந்தாரா மற்றும் காஷ்மீரி பைல்ஸ் ஆகிய நான்கு திரைப்படங்களும் நாமினேஷனுக்கு வந்தன. பார்த்திபன் தனது அறிவை மட்டுமே செலவு செய்து தன்னுடைய படைப்பை இந்த உயரத்திற்கு எடுத்து சென்றுள்ளார் என ரசிகர் ஒருவர் ட்வீட் செய்து இருந்தார். இந்நிலையில், பார்த்திபன் இறந்துவிட்டதாக வதந்திகள் பரப்பப்பட்டன.






பார்த்திபன் ஸ்டைலில் பதிலடி:  


சில தினங்களுக்கு முன்னர் பார்த்திபன் இறந்து விட்டதாக யூட்யூப் சேனல் ஒன்று வதந்தியை வெளியிட்டது. அந்த சேனலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவரின் ஸ்டைலில் ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார் பார்த்திபன். "நொடிகள் மரணமடைவதும், மறுபடியும் அடுத்ததாய் உயிர்த்தெழுவதும் இயற்கை! நடிகன் பற்றிய செய்திகள் இப்படி ஊர்வலமாவதன் காரணம் புரியவில்லை! Negativity-ஐ பரப்ப இதுபோல் சில நண்பர்கள் இருக்கிறார்கள். மகிழ்ச்சியை மனதில் நிரப்புவோம் மக்களுக்கும் பரப்புவோம்" என போஸ்ட் செய்துள்ளார் பார்த்திபன். அவரின் இந்த ட்விட்டர் போஸ்ட் சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.