எழுத்தாளர், நடிகர் , இயக்குநர் என பன்முக திறமையை கொண்டவர் இயக்குநர் பார்த்திபன். புதிய பாதை திரைப்படம் மூலம் இயக்குநரான பார்த்திபன். அந்த படத்தின் மூலம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று நடைப்பெற்ற 67ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் பார்த்திபனுக்கு ’ஒத்த செருப்பு’ என்ற திரைப்படத்திற்கான சிறந்த சவுண்ட் எபக்ட் மற்றும் சிறந்த ஜூரிக்கான விருதுகள் கிடைத்ததுள்ளது .துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல். முருகன் மற்றும் விருது பெறுவோர்கள் கலந்துகொண்டனர்.
தான் நடித்து இயக்கிய ஒன் மேன் ஷோவான ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு தேசிய விருது கிடைத்தும் அதிருப்தியில் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார் பார்த்திபன். நிகழ்ச்சி முடிந்த பிறகு தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் “ உண்மையாக சொல்ல வேண்டுமானால் இந்த படத்திற்கு இன்னும் நிறைய விருது கிடைக்க வேண்டும். ஆஸ்கார் விருதை பார்த்தீர்கள் என்றால் ஒரே படத்திற்காகவே 7, 8 விருதுகள் கிடைக்கும் .ஒத்த செருப்பு ஒரு தனித்துவமான திரைப்படம் . இந்த படத்திற்கு ஏன் நடிப்பிற்கு எனக்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்பது எனக்கு ஆதங்கம். தற்போது எனக்கு விருது கிடைத்தது சந்தோஷம். கிடைக்காத விருதுக்கு அடுத்த படத்தில் வருகிறேன். ” என தனது அடுத்த படம் குறித்தும் பேட்சியுள்ளார்.
பார்த்திபன் தற்போது இரவின் நிழல் என்னும் சிங்கிள் ஷார்ட்டில் எடுக்கப்பட்ட குறும்படத்தை உருவாக்கியுள்ளார். அந்த படம் உலகத்தோட முதல் படமாக இருக்கும் எனவும் யாரும் செய்யாத முயற்சியை பார்த்திபன் அந்த படத்திற்காக செய்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். முன்னதாக படத்தை பார்த்த ஏ.ஆர்.ரஹ்மான் பார்த்திபனை வெகுவாக பாராட்டியுள்ளார். இது குறித்து பார்த்திபன் தனது ட்விட்ட பக்கத்தில் வெளியிட்ட பதிவில் “இரவின் நிழல்-இன்று இசை புயல் ARR பின்னணி இசை கோர்ப்பு இனிதே துவங்கியது முழு படத்தை முதலில் பார்த்ததே ஆஸ்கார் தான்.”இது single shot முதல் படம் மட்டுமல்ல முதன்மையான படமாகவும் உதாரண படமாகவும் இருக்கும்-பாராட்டி keyboard-ல் விரல் ஓட்டினார்-வைரல் ஆகப் போகும் இசை பிரள்யத்திற்காக” என தெரிவித்திருந்தார்.