அரசியல் நையாண்டி, நாட்டு நடப்புகளோடு ஒன்றிய நகைச்சுவை என யூடியூப் பக்கத்தை கலக்கி வருபவர்கள் கோபி மற்றும் சுதாகர் இணை. ஆரம்ப காலக்கட்டத்தில் பிரபல தொலைக்காட்சியால் புறக்கணிக்கப்பட்ட இவர்கள் , மெட்ராஸ் செண்ட்ரல் என்னும் சேனலில் இணைந்து வீடியோக்களை பதிவிட்டு வந்தனர். அங்குதான் இவருக்கான தனி ரசிகர் பட்டாளம் குவிய தொடங்கியது. அதன் பிறகு அந்த சேனல் நிர்வாகத்திற்கும் இவர்களுக்கும் இடையே ஏதோ சலசலப்பு ஏற்படவே அதனை விட்டு வெளியேறி , பரிதாபங்கள் என்ற தனி யூடியூப் சேனலை தொடங்கினார்கள். அதுவும் அவர்கள் எதிர்பார்த்த மாதிரி க்ளிக் அடித்தது. சமூக வலைத்தளங்களில் பிரபலங்களாக இருப்பவர்களின் இலக்கு என்னவோ வெள்ளித்திரையை நோக்கியதாகத்தான் இருக்கும். அதற்கு கோபி மற்றும் சுதாகர் தேர்வு செய்த பாதை கிரவுட் ஃபண்டிங்.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கோபி மற்றும் சுதாகர் நேற்று விளக்க காணொளி ஒன்றை வெளியிட்டனர். அதில் தங்களிடம் விளம்பரத்திற்காக வந்த ஒரு செயலி மோசடி செய்திருப்பதால் நாங்களும் அவ்வாறு மோசடியில் ஈடுபட்டிருப்போம் என நினைக்க வேண்டாம். படம் குறித்த அறிவிப்பை சப்ஸ்கிரைபர்ஸ்களுக்கு நாங்கள் தெரிவிக்கவில்லை ஆனால் பணம் போட்ட தயாரிப்பாளர்களுக்கு அத்தனை விவரங்களையும் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். கொரோனாவின் தாக்கத்தால் சினிமா மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. அதனால்தான் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டை கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் டீஸர் வெளியிடுவோம். அதன் தரத்தை பார்த்து எங்களின் மெனக்கடல்களை புரிந்துக்கொள்வீர்கள் என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் பரிதாபங்கள் சேனலில் இயக்குநராக, நடிகராக இருந்த பாலு போஸ் என்பவர் , தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார், அதில் “ பரிதாபங்கள் சேனலில் நான் இயக்கிய அனைத்து வீடியோக்களும் நீக்கப்பட்டுவிட்டது. வீடியோ எங்கே என கேட்டு தயவு செய்து வெறி ஏத்த வேண்டாம் , நன்றி வணக்கம்” என தெரிவித்துள்ளார். பாலு போஸ் நிறைய மோசடி குறித்த வீடியோக்களை பரிதாபங்கள் சேனலில் செய்திருந்தார். அந்த வீடியோக்கள் மட்டும் தற்போது சேனலில் இருந்து அழிக்கப்பட்டிருப்பது கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.