பிரபல யூட்யூப் சேனலான ‘பரிதாபங்கள்’ சேனலின் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர்கள் கோபி மற்றும் சுதாகர். இந்த கூட்டணியில் உருவான வீடியோக்கள் டெம்ப்ளேட்டாகவும், அடிக்கடி டிரெண்டாவதும் வழக்கம்.இந்நிலையில், கஜா புயல் தாக்கியபோது ’ஃபண்ட்மெலன்’ என்ற செயலி மூலம் நிதி திரட்டுவதாக அறிவித்திருந்தனர் கோபி – சுதாகர் ஜோடி. அதன் மூலம், கிட்டத்தட்ட 35 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளது.


அதனை தொடர்ந்து, தமிழ் சினிமா இயக்கப் போவதாக அறிவிப்பை வெளியிட்டு, நிதி திரட்டுவதன் மூலம் திரைப்படத்தை தயாரிக்க போவதாக கோபி – சுதாகர் அறிவித்திருந்தனர். அதன்படி, ஃபண்ட்மெலன் செயலி மூலம் நிதி திரட்டினர். தற்போதைய நிலவரப்படி கிட்டத்தட்ட 6.5 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது. பணம் கிடைத்தவுடன், திரைப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது இந்த குழு.


’ஹே மணி கம் டுடே, கோ டுமாரோ’ என்ற தலைப்பில் உருவாகும் படத்தின் டைட்டில் லுக் போஸ்டரும் சமீபத்தில் வெளியானது. ஆனால், கொரோனா பரவல் தீவிரம் அடைந்த நிலையில், அத்திரைப்படம் பற்றிய தகவல்கள் ஏதும் வெளிவராமல் இருந்தது. அதனை சுட்டிக்காட்டி, சில தரவுகளோடும், ஆதாரங்களோடும் ஜேசன் சாமுவேல் என்ற யூட்யூபர் தனது சேனலில் கோபி - சுதாகர் ஸ்காம் என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.


‛மதன் பேசல... பேச வைக்கப்பட்டார்... அந்த 4 பேரை விசாரிங்க’ -பப்ஜி மதன் மனைவி பகீர் பேட்டி!



முன்னதாக, பப்ஜி மதன் மோசடியை தனது சேனலில் அம்பலப்படுத்தியவர், இப்போது கோபி-சுதாகர் சேனல் பற்றி வீடியோ பதிவிட்டுள்ளார். இரண்டரை மணி நேரம் உள்ள இந்த வீடியோவில், அந்த நிதி திரட்டும் செயலி மூலம் மேற்கொள்ளப்பட்ட மோசடிகளை அவர் விவரித்துள்ளார். இந்த மோசடியில் சிக்கிய 800-க்கும் மேற்பட்டவர்கள் தனியே ஒரு டெலிகிராம் குழுவை தொடங்கி, இழந்த பணத்தை மீட்க முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


இந்த மோசடி குறித்து பார்வையாளர்கள் கமெண்ட் செய்த போது, பரிதாபங்கள் குழு சார்பில் அந்த கமெண்டுகள் நீக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் அமைதி காத்து வந்துள்ளனர். இது சந்தேகத்தை கிளப்புவதாக ரசிகர்களும், பணத்தை இழந்தவர்களும் புலம்பி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கோபி - சுதாகர் தரப்பில் பதில் அளிக்கப்படாத நிலையில், அவர்களிடம் இருந்து வரும் தெளிவான விளக்கமே இந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புளி வைக்க முடியும்.


VIndhiya against CM stalin : உங்களுக்கு வந்தா ரத்தம்... மக்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? - முதல்வருக்கு கேள்வி எழுப்பிய விந்தியா!