பெண் குழந்தைகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை ஆண் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும் என நடிகை ஓவியா தெரிவித்துள்ளார். 


இது குறித்து பேசிய ஓவியா, “கலாச்சாரம் என்ற பெயரில் எதையும் மறைக்க வேண்டாம். ஓபனாக அனைத்தையும் பேச வேண்டும். அப்போது தான் தீர்வு கிடைக்கும். ஆண் பிள்ளைகளிடம் பெண் குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். சிறுவயதிலேயே அவ்வாறு வளர்த்தால் எந்தவிதமான குற்ற சம்பவங்களிலும் ஆண் பிள்ளைகள் ஈடுபட மாட்டார்கள்" என்று அவர் பேசினார். ஓவியா பேசிய இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


 






கேரளாவில் பிறந்த ஓவியா கடந்த 2007 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘கங்காரூ’  படத்தில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான புதிய முகம் படத்தில் நடித்தார். கடந்த 2010 ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியான களவாணி படம் மூலம் அறிமுகமானார். இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ந்து  கலகலப்பு, முத்துக்கு முத்தாக, யாமிருக்க பயமேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.


 






அதனைத்தொடர்ந்து அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் அவர் நடந்து கொண்ட நடவடிக்கைகள் மூலம் இன்னும் பிரபலமானார். அதனைத்தொடர்ந்து அவர் சினிமாவில் அடுத்த உயரத்திற்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்ததாக அவர் நடித்த 90 ML, களவாணி  2 ஆகிய இரண்டு படங்களும் சரியான வரவேற்பை பெற வில்லை. இந்த நிலையில் தற்போது அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.