Pandian Stores : ஷூட்டிங் ஸ்பாட்டில் அலப்பறை செய்த மீனா..! கம்பெனி கொடுத்த ஐசு..!

பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சங்கமத்தில் ஐஸ்வர்யாவும், மீனாவும் செய்யும் அலப்பறை வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Continues below advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் இரவு 8 மணிக்கும், பாக்கியலட்சுமி தொடர் 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகி வருகிறது.

Continues below advertisement

தற்போது, பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்களின் மெகா சங்கம நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதனால், இந்த இரண்டு சீரியல்களின் ரசிகர்களும் உற்சாகமாக உள்ளனர். இந்த நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டின்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யாவும், மீனாவும் செய்த அலப்பறை வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், ஷூட்டிங்கின் போது பாண்டியன் ஸ்டோர்சின் ஐஸ்வர்யா மழைக்கு இதமாக நூடுல்ஸ் செய்கிறார். பீன்ஸ், கேரட் உள்ளிட்ட காய்கறிகளை வெட்டி அடுப்பில் உள்ள பாத்திரத்தில் ஐஸ்வர்யா கொட்டுகிறார். பின்னர், அதே பாத்திரத்தில் நூடுல்சையும் கொட்டி மசாலாவையும் கலக்கி வேக வைக்கிறார். இந்த அழகான சூழலுக்கு நூடுல்ஸ் செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும் என்றும், அதனால் சமைத்து சாப்பிடுவதாகவும் விளக்கம் அளிக்கிறார்.

சங்கமம் ஷூட்டிங் என்பதால் மற்ற நடிகர்களுக்கான ஷாட்கள் போய்க் கொண்டிருப்பதால், தற்போது தனக்கு ஷாட் இல்லை என்றும் அதன் காரணமாகவே நூடுல்ஸ் செய்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறுகிறார். நூடுல்ஸ் தயாரானவுடன் அந்த இடத்திற்கு மீனாவும் வர ஐஸ்வர்யா மீனாவிற்கும் நூடுல்சை கொடுத்து சாப்பிட சொல்கிறார். இவர்கள் இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்யும் அலப்பறை தற்போது வைரலாகி வருகிறது.


ஷூட்டிங் ஸ்பாட்டில் இவர்கள் இவ்வாறு ரகளை செய்தால், சீரியலில் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் இணைந்ததால் கோபி ராதிகாவை சரியாக பார்க்க முடியாமலும், ராதிகாவிடம் பேச முடியாமலும் அவதிப்பட்டு வருகிறார். மேலும், நேற்று முன்தின எபிசோடில் கோபி மாரடைப்பு ஏற்பட்டது போல நடித்த போது, பாண்டியன் ஸ்டோர்சின் நாயகன் கோபிக்கு முதலுதவி செய்கிறேன் என்ற பெயரில் அவருக்கு உதட்டோடு உதடு வைத்து மூச்சு கொடுக்க முயற்சித்ததை பார்த்து கோபி அதிர்ச்சியடைந்தது ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.   

 

Continues below advertisement
Sponsored Links by Taboola