வழக்கமாக எம்.ஜி.ஆர்., படங்கள், புரட்சி வசனங்களும், ஆக்ஷன் பரபரப்பும், தீ பறக்கும் காட்சிகளுமாய் நகரும். ஆனால், அவை அனைத்திற்குள் முற்றிலும் மாறாக, மனித நேயத்தை போற்றும் விதமாக உருவான படம் ‛பல்லாண்டு வாழ்க’.  சாந்தாராமின் ‛தோ ஆன்கி பராஹத்’ என்கிற இந்தி படத்தின் தமிழ் ரீமேக் தான் பல்லாண்டு வாழ்க. ஒரு சிறை அதிகாரி, 6 சிறை கைதிகளை நல்வழிப்படுத்தி அவர்களை மீட்பதே படத்தின் கரு.

எம்.ஜி.ஆர்.,க்கு ஜோடியாக லதா. 

சிறை கைதிகளாக, மனோகர், குண்டுமணி, தேங்காய் சீனிவாசன், வீரப்பா, நம்பியார், வி.கே.ராமசாமி ஆகியோர் நடித்திருந்தனர். 1975ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தை இயக்குனர் கே.சங்கர் இயக்கியிருந்தார். பாடல்கள், ஒளிப்பதிவு, திரைக்கதை என எல்லா ஜானரிலும் ரசிகர்களை குஷிப்படுத்தி நல்ல வசூ,ல் வேட்டையை பெற்றது பல்லாண்டு வாழ்க!

 

நடிக்கப்பேரரசர் எம்.ஜி.ஆர்., என்கிற முகநூல் பக்கத்தில் பல்லாண்டு வாழ்க படம் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டுள்ளனர். இதோ அந்த தகவல்...

 

‛‛தலைவரின் லட்சியப் படமான "பல்லாண்டு வாழ்க" 1975 அக் 31 ல் வெளியாகி நல்ல வெற்றியை பெற்றது. உதயம் புரடொக்ஷன்ஸார் தலைவரோடு இணைந்த 3 வது தயாரிப்பான "பல்லாண்டு வாழ்க" முதல் இரண்டு படங்களான "இதயவீணை" "சிரித்து வாழ வேண்டும்" ஆகியவை 100 நாட்கள் ஓடினாலும் அதனினும் பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. படத்தில் தலைவரின் கண்களுக்கு உள்ள சக்தியை அனைவரையும் உணர வைத்தது.



பாடல்கள் அத்தனையும் அருமையான இளமையான மெட்டுக்கள். 'தோ ஆங்கென் பாராகத்' என்ற சாந்தாராமின் படத்தை தழுவி எடுத்தாலும் தமிழுக்கு ஏற்ற வகையில் மாற்றம் செய்து எடுக்கப்பட்டது. "இதயக்கனி"யின் 72 வது நாளில் வெளியாகிய போதிலும் அதற்கு அடுத்ததொரு வெற்றியை பெற்றாலும் ஒரு சில சென்டர்களில் அபரிமிதமான வசூலை கொடுத்தது எனலாம்.



நெல்லை பூர்ணகலாவில் 101 நாட்கள் ஓடி மாநகரிலேயே மாற்று நடிகரின் எந்த ஒரு படமும் நெருங்க முடியாத வெற்றியை பதிவு செய்தது.நெல்லை பூர்ணகலாவில் 100 நாட்கள் கண்ட ஒரே படம் "பல்லாண்டு வாழ்க" மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 101 நாட்களில் ரூ 260000 ஐ வசூலாக பெற்று அசர வைத்தது.



மதுரையில் 33 நாட்களிலேயே 3 லட்சத்தை தாண்டி சாதனை செய்தது.

சென்னையில் தேவிபாரடைஸ்(104) அகஸ்தியா(104) சரவணாவில்(70) வெளியாகி மொத்தம் 278 நாட்கள் ஓடி ரூ 1453287.36 வசூலாக பெற்றது.1975 ம் ஆண்டில் 3வது 10 லட்சம் தாண்டி வசூலான படமாக சாதனை செய்தது.



தேவிபாரடைஸில் மட்டும் ரூ 793428.80 வசூலானது. அகஸ்தியாவில் 104 நாட்களில்

ரூ 428927.19 வசூலாக பெற்றது.

சரவணாவில் 70 நாட்களில் ரு 230931.37 வசூலானது. தேவி பாரடைஸில் வெளியான அய்யனின் அனைத்து படங்களையும் வென்று முன்னணி பெற்றது குறிப்பிடத்தக்கது. நெல்லையில் 101 நாட்களிலேயே ரூ 260534.80 பெற்று அய்யனின் அனைத்து படங்களையும் ஓவர்டேக் செய்தது "பல்லாண்டு வாழ்க" படத்தின் தனி சிறப்பு.’’

என்று அந்த முகநூல் பக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. 

47 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் வெளியான இத்திரைப்படம், இன்றும் அறம் பேசும்.