பங்குச்சந்தை நிலவரத்தின்படி வெள்ளியன்று ஈக்விட்டி பெஞ்ச்மார்க்குகள் உயர்வுடன் முடிவடைந்துள்ளன. இந்த உயர்வினால்  பங்குச்சந்தைக் குறியீட்டில் முக்கியப் பங்கு வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்ஐஎல்) மற்றும் புதிய வெளிநாட்டு நிதி வரவுகளை வாங்குவதற்கு பெரும் உதவியாக இருந்தது. மேலும் சென்செக்ஸ் 203 புள்ளிகள் அதிகரித்து 59,959.8 புள்ளிகளில் நிலைத்து நின்றது. இதே வழியில், நிஃப்டி 0.3 சதவிகிதம் முன்னேறி 17,786.8-ல் முடிந்தது. கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி மற்றும் அதன் கூட்டு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை பெஞ்ச்மார்க் குறியீடுகளுக்கு அதிக ஊக்கம் அளித்தன.


இதுகுறித்துக் கருத்து கூறிய ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் மூத்த தொழில்நுட்ப மற்றும் டெரிவேட்டிவ் ஆய்வாளர் சுபாஷ் கங்காதரன் "நிஃப்டி ஒரு குறுகிய கால ஏற்றத்தில் இருக்கும் அதே வேளையில், முந்தைய இடைநிலை அதிகபட்சமான 18,096 ஐ நோக்கிச் செல்லத் தயாராகிவிட்டாலும், எந்த ஒரு லேசான மாற்றத்திலும் குறியீட்டெண் 17,607-17,505 என்ற உடனடி ஏற்றத்தை விட சற்று உயர்நிலையைத் தொடர்வது முக்கியம்," என்று  கூறினார்.




 நிஃப்டி மேலும் அதிகரிப்பது குறித்து கணித்துள்ள நிபுணர்கள் "8 அமர்வுகளில் 800 புள்ளிகளுக்கு மேல் தெளிவான முன்னேற்றத்தைக் கண்ட நிஃப்டி கடந்த 4 வர்த்தக அமர்வுகளில் 17,800 என்கிற புள்ளியைச் சுற்றியே நிலைத்து வருகிறது. நடப்பு உள்நாட்டு வருவாய்களில் வலுவான ட்ராக்‌ஷன், எஃப்ஐஐகள் வாங்குபவர்களை மீண்டும் அழைத்து வருதல் மற்றும் நேர்மறையான உள்நாட்டு குறியீட்டு எண் உயர்வுகள் ஆகியவை நிஃப்டியை மேலும் அதிகரித்து 18,000 என்கிற எண்ணை எட்ட வழிவகுக்கும். அடுத்த சில நாட்களில் 18,200 வரை இது உயரலாம்" என்று மோதிலால் ஓஸ்வால் நிறுவனத்தின் சில்லறை ஆராய்ச்சித் தலைவர் சித்தார்த்த கெம்கா கூறுகிறார்.


"தினசரி காலக்கெடுவில், நிஃப்டி இன்டெக்ஸ் சராசரிக்கு மேல் நீடித்து வருகிறது, இது குறுகிய கால ஏற்றத்தை உறுதிப்படுத்துகிறது. குறுகிய காலத்தில், போக்கு நேர்மறையாக  இருக்கலாம்.இதனால் நிஃப்டி17,700/17,550 முதல் 17,850/17,950 வரை இருக்கும் என கணிக்கப்படுகிறது." என்று எல்கேபி செக்யூரிட்டிஸின் மூத்த தொழில்நுட்ப ஆய்வாளர் ரூபாக் டி கூறியுள்ளார்.


 


ஆய்வாளர்கள் பரிந்துரைத்தபடி இன்று வாங்க வேண்டிய பங்குகள் -


டாடா மோட்டார்ஸ்: டாடா மோட்டார்ஸ் வாங்க, நிறுத்த இழப்பு ₹384, இலக்கு ₹445


கோல் இந்தியா: கோல் இந்தியாவை வாங்க, இழப்பு ₹234, இலக்கு ₹254


யுபிஎல்: யுபிஎல் வாங்குங்க, இழப்பு ₹690, இலக்கு ₹740-750


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்: ரிலையன்ஸ் பங்குகளை வாங்க, இழப்பு ₹2,460, இலக்கு ₹2,600-2640