ஓரேவா நிறுவனம், பாலத்தை திறப்பதற்கு முன்பு அதிகாரிகளிடம் தகுதி சான்றிதழை எடுக்கவில்லை என மோர்பி உள்ளூர் நகராட்சி தலைவர் சந்தீப்சின் ஜலா கூறுயுள்ளார்.


விபத்து நடந்தது எப்படி
நேற்று மாலை 6.42 மணிக்கு இந்த விபத்து நடந்தது. விபத்தின் போது பாலத்தில் 500 பேர் இருந்தனர். சத் பூஜைக்காக மக்கள் கூட்டம் பாலத்தில் குவிந்திருந்தது. அப்போது எதிர்பாராமல் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்தப் பாலம் கேபில்களால் ஆன பாலம். 


இது குறித்து குஜராத் தொழிலாளார் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் ப்ரிஜேஷ் மிஸ்ரா கூறுகையில், "இந்தப் பாலத்தை அண்மையில்தான் சீரமைத்தோம். குஜராத் புது வருடத்தை ஒட்டி அக்டோபர் 26 ஆம் தேதி திறக்கப்பட்டது. ஆனால் அதற்குள் இவ்வளவு பெரிய விபத்து நடந்திருப்பது எங்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்திற்கு அரசாங்கம் பொறுப்பேற்கிறது" என்று கூறினார்.  


பிரதமர் நரேந்திர மோடி, முதல்வரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். நிகழ்விடத்தில் பல்வேறு அரசுத் துறை உயரதிகாரிகளும் குவிந்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி இந்த விபத்து தொடர்பாக ட்வீட் செய்துள்ளார். அதில் அவர், "மோர்பி பால விபத்து என்னை மிகுந்த கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. குஜராத் முதல்வர் பூபேந்திராவுக்கு பேசியுள்ளேன். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெறுகின்றன. அதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று கூறியுள்ளார். மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள், தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்" என்று பதிவிட்டிருந்தார். இந்த விபத்தின் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ள இருந்த சாலை பயணம் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.


 ஓரேவா என்ற தனியார் அறக்கட்டளை அரசின் டெண்டர் பெற்று பாலத்தை புதுப்பித்தது. பாலம் சீரமைப்பதற்காக ஏழு மாதங்களாக அந்த பாலம் மூடப்பட்டது. புணரமைப்புக்குப்பின் அக்டோபர் 26 அன்று மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. குஜராத்தின் மோர்பி நகரில் இடிந்து விழுந்த நூற்றாண்டு கால பழமையான பாலத்தை புதுப்பித்தவர், அதை மீண்டும் திறப்பதற்கு முன்பு அதிகாரிகளிடமிருந்து தகுதி சான்றிதழை பெறவில்லை என்று உள்ளூர் நகராட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.


பாலம் இடிந்து விழுந்ததில் 132 பேர் உயிரிழந்துள்ளனர்.  80க்கும் அதிகமானோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளனர். மேலும் பலர் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மோர்பி உள்ளூர் நகராட்சி தலைவர் சந்தீப்சின் ஜலா கூறுகையில், ஓரேவா நிறுவனம், பாலத்தை திறப்பதற்கு முன்பு அதிகாரிகளிடம் தகுதி சான்றிதழை எடுக்கவில்லை. "இது ஒரு அரசாங்க டெண்டர். ஒரேவா குழு அதன் புதுப்பித்தல் விவரங்களை அளித்து, பாலத்தைத் திறப்பதற்கு முன் தரச் சரிபார்ப்பைப் பெற வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. இது பற்றி அரசாங்கம் அறிந்திருக்கவில்லை," என கூறினார்.


https://twitter.com/ANI/status/1586908775801229312?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1586908775801229312%7Ctwgr%5Eddaa57a4c446f01b22235742d445ef6a97e22565%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.livemint.com%2Fnews%2Findia%2Fmorbi-cable-bridge-collapse-in-gujarat-live-updates-pm-modi-cancels-road-show-death-toll-rises-11667175709325.html


 


ராணுவத்தின் முப்படை வீரர்களும்,  தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, விபத்தில் சிக்கியவரை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.