கடந்த சில ஆண்டுகளாக, மலையாள சினிமா நாடு முழுவதிலும் இருந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலர் மலையாளத் திரைப்படத் துறையை தற்போது இந்தியாவின் சிறந்த முக்கிய திரைப்படத் துறையாகக் குறிப்பிட்டுள்ளனர். கேரளாவில் தயாரிக்கப்பட்ட படங்களின் தரத்தை கொண்டாடுவதில் பிற மொழி திரையுலக பிரபலங்களும் இணைந்துள்ளனர். இந்தியப் பிரபலங்கள் மட்டுமின்றி, திரையுலகில் உள்ளவர்களும் மலையாளப் படங்களைப் பாராட்டி வருகின்றனர். 


பல சந்தர்ப்பங்களில், மலையாள சினிமாவையும் அதன் திறமையான நடிகர்களையும்தான் விரும்புவதாக தெளிவாகத் தெரிவித்தார் மஹிரா. தற்போது, ​​மலையாளப் படங்களைப் பற்றி உயர்வாகப் பேசும் மஹிராவின் வீடியோ கிளிப் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் மோகன்லால் மற்றும் ப்ரித்வி ராஜ் குறித்தும் ப்ரித்வி ராஜின்  திரைப்படமான ஜன கண மன குறித்தும் பாராட்டியுள்ளார். 




மலையாள சினிமா


பாகிஸ்தான் நடிகையான இவர், மலையாள சினிமாவைப் பின்தொடர்வதாக அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு அவர் அளித்த ஒரு நேர்காணலில்,  அனைவரும் மலையாளப் படங்களைப் பார்க்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். மேலும், தான் குறிப்பாக மலையாளப் படங்களைப் பற்றிப் பேசுவதாகவும், அதற்காக மற்ற தென்னிந்திய மொழிப் படங்களாகத் தவறாக நினைக்க வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். 




ப்ரித்விராஜ் சுகுமாரனை சந்தித்து அவரது ஜன கண மன திரைப்படம் மனதை தொட்டதாக கூறுவேன் என மஹிரா கான் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். மேலும், மஹிரா, 2022-ஆம் ஆண்டு வெளியான க்வாய்ட்-இ-ஆசம் ஜிந்தாபாத் குழுவினருடனான உரையாடலின்போது, ​​மோகன்லால் மற்றும் பிரியதர்ஷனுடன் சேர்ந்து பணியாற்றியதைப் பற்றி பேசினார்.


பிரியதர்ஷன் மற்றும் மோகன்லால் காம்போவின் பல படங்கள் பெரும்பாலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளன என்றும் அவரது சக நடிகர் ஃபஹத் முஸ்தபாவிடம் குறிப்பிட்டார். மஹிரா மலையாளப் படங்களில் இருந்து வரும் யோசனைகள் மற்றும் அவற்றின் இயக்கம் மற்றும் ஒளியமைப்பு ஆகியவற்றைப் பாராட்டினார். திரைப்பட விமர்சகர் அனுபமா சோப்ரா தன்னை மலையாளப் படங்களுக்கு அறிமுகப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். மஹிரா தனது மொழியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட மொழியில் எடுக்கப்பட்ட படங்களை முழு மனதுடன் பாராட்டுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என மலையாள சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


Jawan : ஜவானில் கெளரவ தோற்றத்தில் விஜய்? மாஸ் ஹீரோக்களை எண்ட்ரியை பார்க்க காத்திருக்கும் ரசிகர்கள்..


Boycott Jawan : ஜவானை புறக்கணிக்க வேண்டும்... சமூக வலைதளத்தில் திடீரென்று ட்ரெண்டாகும் ஜவான் எதிர்ப்பு