தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வளம் வரும் நடிகர் கார்த்தி திரைப்பயணத்தில் மிக முக்கியமான டர்னிங் பாயிண்ட் படமாக அமைந்தது லிங்குசாமி இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான 'பையா' திரைப்படம். கார்த்தி - தமன்னா காம்போவில் உருவான இப்படம் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் படமாக 100 நாட்களையும் கடந்து வெற்றிகரமாக ஓடி வசூலிலும் சாதனை படைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
கவனம் ஈர்த்த திரைக்கதை :
வழக்கமான காதல் கதை தான் என்றாலும் படத்தின் இயக்குநர் அப்படத்தை நகர்த்திய விதம் மிகவும் இம்ப்ரெஸ்ஸிங்காக இருந்ததால் ரசிகர்கள் 'பையா' படத்தை கொண்டாடினார்கள். கார்த்தி - தமன்னா ஆன் ஸ்கிரீன் ப்ரசென்ஸ் மிகவும் அற்புதமாக ஃப்ரெஷாக அமைந்திருந்தது கூடுதல் பிளஸ் பாயிண்டாக அமைந்தது. பார்த்தவுடன் ஹீரோயின் மீது காதல் வசப்படும் ஹீரோ, இருவரும் சேர்ந்து பெங்களுரிலிருந்து மும்பைக்கு பயணம் செல்வது என கதை மிகவும் ஸ்வாரஸ்யமாக நகர்த்தப்பட்டு இருந்தது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
சிறப்பான இசை :
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் A1 ரகம். இன்றும் அனைவரின் பிளே லிஸ்டில் அப்பாடல்கள் நிச்சயம் இடம் பெற்றுஇருக்கும். யுவனின் பெஸ்ட் எவர் பாடல்களை கொண்ட படம் பையா எனலாம்.
பையா 2
வெகு நாட்களாக பையா 2 படம் குறித்த கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் இருந்த வந்த நிலையில் சமீப காலமாக பையா 2 பேச்சுகள் அடிக்கடி அடிபட்டு வந்தன. கார்த்திக்கு பதிலாக ஆர்யாவும், தம்மன்னாவுக்கு பதிலாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக சில வதந்திகள் சமூக ஊடகத்தில் பரவி வந்தது.
கமிட்டாகியுள்ள புதிய ஹீரோ :
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி பையா 2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது முதல் பாகத்தில் கார்த்தி நடித்த கதாபாத்திரத்தில் மறைந்த நடிகர் முரளியின் இரண்டாவது மகனும் அதர்வா முரளியின் சகோதரனுமான ஆகாஷ் முரளி ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹீரோயின் யார் என்ற தகவல் இதுவரையில் வெளியாகவில்லை.
முதல் பாகத்தை தயாரித்து இயக்கிய இயக்குனர் லிங்குசாமியை இரண்டாவது பாகத்தையும் இயக்க உள்ளார் என்றும் படம் உருவாகி வருகிறது என்றும் தகவலும் வெளியாகியுள்ளது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
ரசிகர்களின் கேள்வி :
தமிழ் சினிமாவில் வெளியான பீல் குட் படங்களின் வரிசையில் இடம் பெற்ற பையா படத்தின் இரண்டாவது பாகத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறார்கள் திரை ரசிகர்கள். மேலும் இந்த இரண்டாவது பாகம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்குமா அல்லது வேறு ஒரு கதைக்களத்துடன் இருக்குமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.