சினிமா என்பது பெரிய முதலீட்டில் தான் எடுக்க வேண்டும் என்ற கருத்தை உடைத்து  சேத்துமான் உயர்ந்திருக்கிறது. அதுவும் சுதந்திரமான படமாகவும் சேத்துமான் உருவாகியுள்ளது என்று சேத்துமான் படத்தை தயாரித்த பா.ரஞ்சித் பேசியுள்ளார்.


தொடர்ந்து ஆதரவு அளிக்கும் ஊடக, பத்திரிகைகளுக்கு நன்றி. சேத்துமான் இது ஒரு திரைப்படமாக செட்டாகுமா என்ற சந்தேகம் இருந்தது. கதை என் மனதில் பயங்கரமான தாக்கத்தை ஏற்படுத்தியது. சுயாதீன சினிமாவை ஊக்குவிக்க வேண்டும் என்பது எனது எண்ணம். அதில் இருக்கும் சுதந்திரம் எனக்குப் பிடிக்கும். அந்த சுதந்திரம் சினிமாவுக்குள்ளும் அமைய வேண்டும். அது ஒரு கனவு மாதிரி. அது கட்டுப்படுத்த முடியாது.


அந்த எண்ணங்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. எனக்கு ஆவணப்படங்கள் பண்ணுவதில் மிகுந்த ஆர்வம் இருக்கிறோம். சுயாதீனப் படங்களை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது. தமிழ் அறிமுகமானார். அவர் வெங்கட் பிரபுவிடம் பணியாற்றியுள்ளார் என்று மட்டும் தெரியும். தமிழ் வெளிப்படையாக பேச மாட்டோர். அதனால் அவரிடம் சேத்துமான் பற்றி மட்டுமே அதிகமாக பேசியிருக்கிறேன். சேத்துமான் கதையை ரூ.15 லட்சத்தில் படமாக்கிவிடுவேன் என்று தமிழ் கூறினார். அந்த நம்பிக்கை எனக்குப் பிடித்திருந்தது. அப்போது என்னிடம் காலா படத்திலிருந்து வந்த காசு இருந்ததால் அது சாத்தியமானது. பெருமாள் முருகன் நானா கண்டடைந்தவர். அவர் எழுத்த என் மீது மிக அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சேத்துமானில் வரும் காட்சிகள் எல்லாம் கூளமாதாரி நாவலின் தாக்கம் இருக்கும். ஒரு குழந்தையின் வாழ்க்கையில் உலகம் எவ்வளவு இரக்கமற்றது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. திருச்செங்கோடு பகுதியில் இன்னும் பண்ணையடிமைத்தனம் இருக்கிறது. ஆண்டவீடு என்ற பழக்கமும் இருக்கிறது. என் குழந்தைப்பருவம் அதில் சிக்கவில்லை. 


சேத்துமானை நாங்கள் பரிச்சார்த்த முயற்சியாக தான் எடுத்தோம். லாபம் சார்ந்து இதன் மீது நம்பிக்கை வைக்கவில்லை.
இந்தப் படத்தை முதலில் ஃபெஸ்டிவல்களுக்கு அனுப்பலாம் என்று தோன்றியது. இந்தப் படத்தை எடுப்பதில் இயக்குநருக்கு எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை. பட்ஜெட்டில் மட்டும் சில கெடுபிடிகள் காட்ட வேண்டியிருந்தது. இது இயக்குநரின் படம். என்னுடைய தலையீடு இல்லை. இந்தக் கதையை எடுக்கும்போது எதை சொல்லலாம் சொல்ல வேண்டாம் என்ற வேலையைக் கூட தமிழ் எனக்குத் தரவில்லை.


இந்தியாவில் ஒரு தலித் குடியரசுத் தலைவராகவும் ஆக முடியும். அதே குடியரசுத் தலைவர் ஒரு கோயிலுக்குள் சென்று வந்ததற்காக தீட்டுக் கழிக்க யாகமும் நடத்தப்படும். அந்த அரசியலை தமிழ் மிக அழகாக பேசியுள்ளார். அதனால் தான் சேத்துமான் திரைப்படம் பேசப்படும் படமாக உருவாகியுள்ளது.


சினிமா என்பது பெரிய முதலீட்டில் தான் எடுக்க வேண்டும் என்ற கருத்தை உடைத்து  சேத்துமான் உயர்ந்திருக்கிறது. அதுவும் சுதந்திரமான படமாகவும் சேத்துமான் உருவாகியுள்ளது. சர்வதேச அரங்குகளில் சுயாதீன திரைப்படங்களுக்கு நல்ல சந்தை உள்ளது. அதை இங்குள்ளவர்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த மாதிரியான எண்ணம் உள்ளவர்கள் நீலம் புரொடக்‌ஷ்ன்ஸை அணுகலாம்.