தமிழ் சினிமாவின் ஒரு முற்போக்கு சிந்தனையாளர், வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் பா. ரஞ்சித் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சில தினங்களுக்கு முன்னர் வெளியான திரைப்படம் பொம்மை நாயகி. அறிமுக இயக்குனர் ஷான் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு ஹீரோவாக நடித்த இப்படத்தில் சுபத்ரா, பேபி ஸ்ரீமதி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பட்டியல் இனத்தை சேர்ந்ததால் தனது சொந்த உறவுகளே பாகுபாடு பார்த்து ஒதுக்கி வைக்கிறார்கள். யோகி பாபு மகளிடம் பாலியல் அத்துமீறல் செய்தவர்களை கண்டிக்காத ஊர் மக்களால் காவல்துறையின் உதவியை நாடுகிறார். அங்கு அவருக்கு நீதி கிடைக்கிறதா என்பது தான் பொம்மை நாயகி படத்தின் கதைக்களம். பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை விவாக எடுத்துரைத்த இப்படம் திரை ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.


 



பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த பா. ரஞ்சித், நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் கீழ் மெட்ராஸ், கபாலி, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் படங்களை தயாரித்துள்ளார். அந்த வகையில் அவர் தயாரிக்கும் 10வது திரைப்படத்தை இயக்குகிறார் அதியன் ஆதிரை. 2019ம் ஆண்டு வெளியாகிய 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தை இயக்கிய இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கும் இரண்டாவது திரைப்படம் இதுவாகும். 


 






 


டைட்டில் வெளியானது :


நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் அடுத்த படைப்பு குறித்த டைட்டில் மற்றும் பல தகவல்கள்  இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என்ற அறிவிப்பினை வெளியிட்டு இருந்தனர் படக்குழுவினர். அந்த வகையில் இப்படத்திற்கு 'தண்டகாரண்யம்' என பெயரிட்டுள்ளனர். மேலும் இப்படத்தில் பா. ரஞ்சித் இயக்கத்தில் அறிமுகமான அட்டகத்தி தினேஷ் மற்றும் நடிகர் கலையரசன் நடிக்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுரை கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பா. ரஞ்சித் திரைப்படங்களுக்கு என்றுமே பெரும் வரவேற்பு இருக்கும் அந்த வகையில் இப்படம் ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பியுள்ளது.