தங்கலான்


பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பார்வதி திருவொத்து , மாளவிகா மோகனன் , பசுபதி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.  ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. சமீபத்தில் தங்கலான் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது தங்கலான் படத்தின் முதல் பாடல் வரும் ஜூலை 17-ஆம் தேதி வெளியாகும் என இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் தெரிவித்துள்ளார். 






இப்படத்தின் முதல் பாடலான மினிக்கி பாடலின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது