இயக்குநர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் இயக்குவதுடன் மற்றொரு புறம் படங்களைத் தயாரித்தும் வருகிறார். 

Continues below advertisement


தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பா. ரஞ்சித் முன்னதாக பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, குதிரைவால், ரைட்டர் ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார்.


இப்படங்களைத் தொடர்ந்து பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கும் பொம்மை நாயகி படம் வெளிவர உள்ளதாக அறிவிக்கப்பட்டது. கடல் சார்ந்த கதைக் களமாக அமைந்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷான்  இயக்கியுள்ள நிலையில், படப்பிடிப்பு கடந்த ஆண்டு இறுதியில் நிறைவடைந்தது.




தொடர்ந்து இப்படத்தின் வெளியீட்டுப் பணிகள் தாமதாகி வந்த நிலையில், தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை மறுநாள் (ஜூலை.22) வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனை பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.


 






பா.ரஞ்சித் இயக்கத்தில் முன்னதாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான சார்பாட்டா பரம்பரை பெரும் பாராட்டுகளைப் பெற்றது.


 






மேலும் ’நட்சத்திரம் நகர்கிறது’ படம் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆண், பெண் பாலினங்கள் தவிர்த்து பால்புதுமையினர் குறித்த காதல் கதையாக விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.