அண்மைக் காலங்களாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. பணவீக்கமும் இதற்கு ஒரு முக்கிய காரணம்.பிராண்டிங் மற்றும் பேக்கிங் செய்யப்பட்ட தயிர், பால், பன்னீர், லஸ்ஸி, சீஸ், கோதுமை மாவு, அரிசி, வெள்ளம், தென், அப்பளம், மீன், இறைச்சி போன்ற பல அத்தியாவசிய பொருட்களின் மீதும் இந்த ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.


ட்விட்டரில் பன்னீர் பட்டர் மசாலா எனும் ஹாஸ்டாக் ட்ரெண்டாகி வருகிறது. ஏதோ சமையல் வீடியோ தான் இருக்கும் என உள்ளே சென்று பார்த்தால், ஜிஎஸ்டி வரி குறித்து  மறைமுகமாக நெட்டிசன்கள் அவர்களின் சங்கடத்தை வெளிப்படுத்தியுள்ளனர். தென்னிந்தியாவில் சாம்பார் எவ்வளவு பிரதானமான உணவோ, அதுபோல்தான் வட இந்தியாவில் பன்னீர் பட்டர் மசாலாவும்.






பன்னீருக்கு  5 % ஜிஎஸ்டியும், வெண்ணெய்க்கு 12%  ஜிஎஸ்டியும், மசாலா பொருட்களுக்கு 5 % ஜிஎஸ்டியும் விதிக்கப்பட்டுள்ளது.ட்ரெண்டாகி வரும் இந்த ட்வீட்டில், இனி நான் பன்னீர் பட்டர் மசாலாசாப்பிட போவதில்லை, இதற்கு ஜிஎஸ்டிதான் காரணம் என்றும், பன்னீர் பட்டர் மசாலா சாப்பிடுவதால் நான் பெருமையாக உணர்கிறேன் என்றும் பன்னீருக்கு  5 % ஜிஎஸ்டியும், வெண்ணெய்க்கு 12%  ஜிஎஸ்டியும், மசாலா பொருட்களுக்கு 5 % ஜிஎஸ்டியும் விதிக்கப்பட்டுள்ள நிலையில் பன்னீர் பட்டர் மசாலாவிற்கு 22 % ஜிஎஸ்டியா என பலரும் கலாய்த்துள்ளனர்.







இதனால் ஓட்டல்களில் மலிவான பன்னீர், வெண்ணெய், மசாலா பயன் படுத்தலாம் அல்லது, பன்னீர் பட்டர் மசாலாவின் விலையே உயரலாம் எனவும் ட்வீட் செய்துள்ளனர். இவையெல்லாம் வேடிக்கையாக இருந்தாலும், ஓட்டல்களிலிருந்து வாங்கப்படும் பன்னீர் பட்டர் மசாலாவிற்கான விலை மொத்தமான பில்லின் தொகையை பொருத்து வேறுபடும். ஜிஎஸ்டி உயர்வினால், நிச்சயமாக உணவகங்களில் விலை ஏற்றப்படும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.