திரையரங்க உரிமையாளர்களை காப்பாற்றும் ரீரிலீஸ்


தற்போதைய நிலைப்படி தமிழ்நாட்டுத் திரையரங்க உரிமையாளர்களின் வண்டி ரீரிலீஸ் ஆகும் படங்களால் தான் ஓடி வருகிறது . கமல் நடித்த வேட்டையாடு விளையாடு , தனுஷ் நடித்த 3  , விஜய் நடித்த கில்லி ஆகிய படங்கள் மறுவெளியீட்டு செய்யப் பட்டு திரையரங்கங்களுக்கு மக்களை ஈர்த்தன. இந்த படங்களால் திரையரங்க உரிமையாளர்களுக்கும் நல்ல லாபம் கிடைத்துள்ளது. புதிதாக வெளியாகும் படங்களில் ஒரு சில மட்டுமே ஓரளவிற்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிபெறுகின்றன. 


கில்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தபடியாக விஜய் நடித்த குஷி படத்தை ரீரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள் அப்படத்தின் தயாரிப்பளர்கள் . இனி வரக்கூடிய நாட்களில் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகும் நாட்களைத் தவிர்த்து திரையரங்குகளில் அதிகம் ரீரிலீஸ் படங்களே அதிகம் ஓடும் என்று எதிர்பார்க்கலாம். விஜய் , அஜித் , ரஜினி , படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்கள் தங்கள் பங்கிற்கு எந்த படத்தை மீண்டும் ரிலீஸ் செய்யலாம் என்பதில் தீவிர விவாதத்தில் உள்ளார்கள். அந்த வகையில் ரஜினி நடித்த படையப்பா படத்தை ரீரிலீஸ் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன.


படையப்பா ரீரிலீஸ்


ரஜினிகாந்த் நடித்து கே.எஸ் ரவிகுமார் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான படம் படையப்பா. சிவாஜி கணேசன் , செளந்தர்யா , ரம்யா கிருஷ்ணன், லக்‌ஷ்மி, மணிவண்ணன், அபாஸ் , செந்தில்  உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாமல்  ரசிகர்களின் மனம் கவர்ந்த படமாக இருந்து வருகிறது படையப்பா. கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதியோடு  இப்படம் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது . இதனை முன்னிட்டு இப்படத்தினை மீண்டும் திரையரங்கில் வெளியிட ரஜினியை சென்று சந்தித்து அவருடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார் படத்தின் தயாரிப்பாளர் பி.எல் தேனப்பன். படம் மீண்டும் வெளியாவது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.


வேட்டையன்


ரஜினிகாந்த் தற்போது த.செ. ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வரும் நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார். ஃபகத் ஃபாசில் , அமிதாப் பச்சன் , மஞ்சு வாரியர்  , துஷாரா விஜயன் , ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். வரும் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கும் வேட்டையன் படம் தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளது. 




மேலும் படிக்க : Madhampatty Rangaraj : குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் புது நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் யார் தெரியுமா?