OTT Release: இறைவன், பரம்பொருள் உள்ளிட்ட ஏராளமான புதிய படங்கள் இந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளன.


திரையில் ரிலீசாகும் படங்களுக்கு போட்டியாக ஓடிடி தளங்களிலும் புதிய படங்கள், வெப் தொடர்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகின்றன. திரைக்கு வந்து ஒரு மாதமே ஆன வெற்றிப் படங்களை ஆன்லைனில் வெளியிட ஓடிடி தளங்கள் போட்டி போட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த மாதம் ரிலீசான படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் வரும் 27ம் தேதி ஓடிடி தளங்களில் ரிலீசாக உள்ளது. 


இறைவன்


அஹமது இயக்கத்தில் சைக்கோ கில்லர் ஜானரில் எடுக்கப்பட்ட இறைவன் படம் கடந்த 28ம் தேதி திரைக்கு வந்தது. ஜெயம் ரவி, நரேன், நயன்தாரா, ராகுல் போஸ், வினோத் கிஷன், சார்லி, விஜயலட்சுமி, அழகம் பெருமாள், பக்ஸ் என பலர் நடித்துள்ள இந்த படும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. படத்தில் கொலை, ரத்தம் உள்ளிட்ட கொடூர காட்சிகள் இடம்பெற்றிருந்ததால் தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கி இருந்தது. அதற்கு ஏற்றார்போலும் பெண்களை மட்டுமே குறித்து வைத்து கொல்லும் கைக்கோ கில்லர் பற்றிய காட்சிகளும் பார்வையாளர்களை அதிர வைத்துள்ளன. திரையரங்குகளில் மட்டுமே அதிர்ச்சி கொடுத்த இறைவன் படம் வரும் 27ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. 


யாரோ


சந்தீப் சாய் இயக்கத்தில் அறிமுக நடிகர் வெங்கட் ரெட்டி நடித்த யாரோ படம் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி  4ம் தேதி திரையரங்கில் வெளியானது. ஒரு மணி 43 நிமிடங்களே கொண்ட இந்த படம் சைக்கோ ஜானரில் எடுக்கப்பட்டுள்ளது. தனியாக சென்னையில் வசிக்கும் ஹீரோவின் வீட்டில் நடக்கும் அமானுஷ்யங்கள் குறித்து போலீசார் விசாரிப்பதே படத்தின் கதையாக உள்ளது. இந்த படமும் வரும் 27ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. 


சந்திரமுகி 2


பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்த ‘சந்திரமுகி 2’ படம் கடந்த 28ம் தேதி வெளியாகியிருந்தது. சந்திரமுகி படத்தில் ரஜினி நடித்திருந்த நிலையில் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா, லஷ்மி மேனன் எனப் பலர் நடித்துள்ளனர். குடும்பங்கள் பார்க்கும் படமான சந்திரமுகி 2 வரும் 27ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. 


பரம்பொருள்


அரவிந்த் ராஜ் இயக்கத்தில் சரத்குமார், அமிதாஷ் பிரதான் நடித்த பரம்பொருள் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் ரிலீசானது. க்ரைம் தில்லர் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பரம்பொருள் வரும் 27ம் தேதி ஆஹா மற்றும் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது. 


ஸ்கந்தா


தெலுங்கில் ராம் பொத்தினேனி இரு வேடங்களில் நடித்த ஸ்கந்தா படம் கடந்த 28ம் தேதி ரிலீசானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் வரும் 27ம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. 


இவை மட்டும் இல்லாமல் வரும் 27ம் தேதி ‘கூழாங்கல்’ திரைப்படம் சோனி லைவிலும், ‘சுரா பானம்’ திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்திலும், ‘பெயின் ஹஸ்ட்லர்ஸ்’ (Pain Hustlers) நெட்ஃப்ளிக்ஸ் தளத்திலும் வெளியாகிறது. மேலும் Knights Of The Zodiac திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்திலும், Master Peace ஹாட்ஸ்டார் தளத்திலும், The Good News ஜியோ சினிமாஸிலும், Duranga 2 ஜீ5 தளத்திலும் வெளியாக உள்ளன.