8 முறை ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகி தற்போது முதல் முறையாக ஆஸ்கர் விருதை வென்றுள்ளார் இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன்.


ஆஸ்கர் 2024


2024 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வருடம் ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது கிறிஸ்டோஃபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம். மொத்தம் 13 பிரிவுகளின் கீழ் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்த படம் சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த இசை உள்ளிட்ட பிரிவுகளில் ஆஸ்கர் வென்றது. இதனைத் தொடர்ந்து சிறந்த நடிகருக்கான விருதை ஐரிஷ் நடிகர் கிலியன் மர்ஃபி வென்றார். சிறந்த துணை நடிகருக்கான விருதை ராபர்ட் டெளனி வென்றுள்ளார். சிறந்த திரைப்படத்திற்கான விருது ஒப்பன்ஹெய்மர் படத்திற்கு வழங்கப்பட்டது.


சிறந்த இயக்குநருக்கான விருதை கிறிஸ்டோஃபர் நோலன் வென்றுள்ளார். சுமார் 22 ஆண்டுகளுக்குப் பின் தனது முதல் ஆஸ்கர் விருது நோலன் வென்றுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.


8 முறை கைநழுவிய ஆஸ்கர்


 கடந்த 22 ஆண்டுகளால திரைப்படங்களை இயக்கி வரும் கிறிஸ்டோஃபர் நோலன் இதுவரை மொத்தம் 8 முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டிருக்கிறார். 2000-ஆம் ஆண்டு நோலன் இயக்கிய மொமெண்டோ (Momento) படம் சிறந்த திரைக்கதைக்காக தேர்வு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2010-ஆம் ஆண்டு இன்செப்ஷன் (Inception) , படத்திற்காக இரண்டு பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டார்.


தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு வெளியான டன்கிர்க் (Dunkirk) படத்திற்காக இரண்டு பிரிவுகளின் கீழ் பின் தற்போது ஓப்பன்ஹெய்மர் படத்திற்காக இரண்டு பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டு இரண்டு விருதுகளையும் தட்டிச் சென்றுள்ளார். சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை முதல் முறையாக நோலன் பெற்றுள்ளார். நோலன் இயக்கிய படங்கள் இதுவரை மொத்தம் 49 பிரிவுகளின் கீழ் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டு அதில் 14 விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


நோலன் ஆஸ்கர் உரை






ஆஸ்கர் விருதை பெற்றுக் கொண்ட நோலன் இப்படி கூறினார் “நிறைய மனிதர்கள் சேர்ந்து என்னை இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்கள். என்னுடைய தயாரிப்பாளர்கள். இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் என்னுடைய குழந்தைகளுக்கு தாயான எம்மா தாம்ஸன், என்னுடைய சகோதரன் ஜோனதன் நோலன் அனைவருக்கும் நான் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆஸ்கர் விருது விழா கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. இந்த நூறு ஆண்டுகளில் என்னுடைய பங்கும் முக்கியமானது என்பதை உணர்வது எனக்கு முக்கியமானது. நன்றி “