2023ம் ஆண்டுக்கான 95 வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. ஆஸ்கர் விருது பெற்றவர்கள் மட்டுமின்றி பரிந்துரைக்கப்பட்ட ஒவ்வொருவரும் ஒரு நல்ல பரிசு பையை எடுத்து செல்லலாம். அந்த பரிசு பையில் உள்ள பொருட்கள் உள்நாட்டுக்கு சொந்தமான வணிகர்களின் பொருட்கள் முதல் நன்கு அறியப்பட்ட உலகளாவிய பிராண்டுகள் வரை அடங்கும். 


 



ஆஸ்கர் பரிசு பையில் உள்ள பரிசுகள்



லாஸ் ஏஞ்சல்ஸில் தலைமையகமாக கொண்ட மார்க்கெட்டிங் நிறுவனமான டிஸ்டின்க்டிவ் அசெட்ஸ் நிறுவனம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு பரிசுப் பைகளை 2002ம் ஆண்டு முதல் வழங்கி வருகிறார்கள். இது அகாடமியுடன் இணைக்கப்பட்டவை அல்ல. 'எவ்ரிஒன் வின்ஸ்' என்ற பிரிவின் கீழ் இந்த ஆண்டு பரிசுப் பைகளுக்கு $1,26,000 செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு பரிசுப் பையில் 60 க்கும் மேற்பட்ட பொருட்கள் உள்ளன. அவற்றில் பல பொருட்கள் அழகு மற்றும் லைஃப் ஸ்டைல் தொடர்புடைய பொருட்கள். 'தி லைஃப்ஸ்டைல்' எனப்படும் கனடியன் எஸ்டேட்டுக்கு ஆடம்பரமான உல்லாச பயணம் மேற்கொள்ள $40,000 மதிப்பிலான டிக்கெட்கள் வழங்கப்படும். மேலும் அதில் 60க்கும் மேற்பட்ட பொருட்கள் அடங்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உட்பட எட்டு பேர் கொண்ட குழு இத்தாலிய லயிட் ஹவுஸ் சென்று அந்த தங்குவதற்கான சலுகைகள் வழங்கப்படும்.


இந்த ஆண்டுக்கான பரிசு பொருட்கள்  ஹவாய்னாஸ் சூட்கேஸில் வழங்கப்படும். அதில் 50% தயாரிப்புகள் பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு சொந்தமான வணிகங்களால் தயாரிக்கப்படுகின்றன என்று கூறப்படுகிறது. மேலும் அதனோடு Miage 
ஸ்கின் பராமரிப்பு பொருட்கள், ப்ளஷ் சில்க்ஸின் சில்க் தலையணை, PETA இன் பயணத் தலையணை, அத்துடன் Ariadne Athens ஸ்கின் கேர் பொருட்கள், தினசரி எனர்ஜி கார்டுகள், குட் ரீசன் கோ, Rarete Studios, ReFa, Proflexa, Oxygenetix மற்றும் பல நிறுவனங்களின் பொருட்கள் பரிசுப் பைகளில் அடங்கும். 


ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தின் நினைவு பரிசு, $25,000 மதிப்பிலான மேனேஜ்மேண்ட் கூப்பன், வீட்டை புதுப்பிப்பதற்கான மைசன் கட்டுமானக் கட்டணம், ஃபேஸ்லிஃப்ட்,, ஹேர் ரீபிளேஸ்மென்ட், லிபோ ஆர்ம் ஷேப்பிங் உள்ளிட்ட சேவைகளுக்குகான தள்ளுபடி கூப்பன் உள்ளன. இந்த கிஃப்ட் செட்டில் உள்ள மிகக் குறைந்த விலை பொருட்கள் என கருதப்படுவது $13.56 பேக் க்ளிஃப் தின்ஸ், $18 ஜப்பானிய பால் பிரட் Ginza Nishikawa. இந்த பரிசு பையில் அடங்கும் பொருட்கள் இலவசம் என்றாலும் அவை வருமானமாக கருதப்படுவதால் அதற்கான வரிகளை செலுத்த வேண்டும்.