Raghuram Passed Away : இளம் இசையமைப்பாளர் திடீர் மரணம்..! அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்..! நடந்தது என்ன..?
2017ஆம் ஆண்டு வெளியான இப்படத்துக்கு ரகுராம் இசை அமைத்திருந்த நிலையில், படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

கோலிவுட் இளம் இசையமைப்பாளரான ரகுராம் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 38. 2017ம் ஆண்டு விதார்த், ரவீனா ரவி நடிப்பில், சுரேஷ் சங்கையா இயக்கத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ஒரு கிடாயின் கருணை மனு. இந்தப் படத்துக்கு ரகுராம் இசை அமைத்திருந்த நிலையில், படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
தொடர்ந்து சில ஆல்பங்களுக்கும் இசை அமைத்தார்.
Just In




இதனிடையே தன் சிறு வயது முதல் 8ஆம் வகுப்பு படிக்கும்போது தொடங்கி ALS எனப்படும் Amyotrophic Lateral Sclerosis என்ற அரியவகை நோயால் இவர் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இயற்பியலாளரும் மறைந்த விஞ்ஞானியுமான ஸ்டீஃபன் வில்லியம் ஹாக்கிங் இதே நோயால் தான் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ரகுராம் இந்த நோய் காரணமாக மிகக் குறைந்த காலமே வாழ்வார் எனக் கூறப்பட்டதாகவும், ஒரு மாதத்துக்கு சுமார் 10 லட்ச ரூபாய் வரை செலவழித்து வந்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் பிரேம்ஜி நடிப்பில் வரவிருக்கும் 'சத்திய சோதனை’ படத்துக்கும் இவர் இசை அமைத்திருந்த நிலையில், நேற்று முன் தினம் (அக்.28) உடல் நலன் மிகவும் குன்ற சென்னை வடபழனியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு போராடி உயிரிழந்த இசையமைப்பாளர் ரகுராமுக்கு ஏராளமான திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.