பி.சி.ஓ.டி. பிரச்சனை இருக்கும் பெண்களுக்கு ஆண் ஹார்மோன் ஆண்ட்ரோஜன் அதிகமாக சுரக்கிறது. இதனால் அவர்களின் ஓவரிக்கள் கருமுட்டை உருவாக்குவதில் சிரமப்படுகிறது. இந்த மாதிரியாக ஹார்மோனில் ஏற்றத்தாழ்வு ஏற்படும்போது, மாதவிடாய் சுழற்சியில் சிக்கல் வருகிறது. இதனால் பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படவும் வாய்ப்பு உருவாகிறது. பெண்ணின் ஹார்மோன் அளவு மாறுபடும் போது இந்த உபாதை ஏற்படுகிறது. 


கருமுட்டை உருவாவதில் சிக்கல் ஏற்படுவதால் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்படுகிறது. ஒரு சில பெண்களுக்கு 10 நாட்களுக்கு ஒருமுறை 20 நாட்களுக்கு ஒருமுறை கூட மாதவிடாய் ஏற்படுகிறது. இவ்வாறாக உங்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்படுகிறதா? கர்ப்பப்பையில் நீண்ட காலமாக கருமுட்டைகள் கட்டி நிற்பதால், அதீத உதிரப்போக்கு ஏற்படுகிறது.


உங்களுக்கு அவ்வாறாக அதீத உதிரப்போக்கு ஏற்படுகிறதா?  70% பெண்களுக்கு பி.சி.ஓ.டி. பாதிப்பு ஏற்படும்போது முகம், உடலின் மற்ற பாகங்களில், நெஞ்சு, தொப்பை ஆகிய பகுதிகளில் முடி வளர்கிறது. தலைமுடி உதிர்ந்துபோகிறது. இந்தப் பிரச்சனையை நீங்களும் எதிர்கொள்கிறீர்களா?


கழுத்து, இடுப்புப் பகுதி, மார்பகங்களுக்குக் கீழ் சருமம் கருத்துப் போய்விடுகிறதா? ஹார்மோன் மாற்றங்களால், சில பெண்களுக்கு தலைவலி ஏற்படும். அதிகப்படியாக சுரக்கும் ஆண் ஹார்மோன்களால் முகம், நெஞ்சு, முதுகுப் பகுதியில் கரும்புள்ளிகள் ஏற்படலாம்.


பி.சி.ஓ.டி. கொண்ட 80% பேருக்கு உடல் எடை அதிகரிக்கிறது. உடல் எடை அதிகரிக்கும் போது சர்க்கரை நோய், இதய நோய்கள், பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம் ஆகியன ஏற்படும். சிலருக்கு மன அழுத்தமும் ஏற்படுகிறது. இதுபோன்றவை தான் பிசிஓடி அறிகுறிகள். இந்த அறிகுறிகள் இருந்தால் ஆரம்ப கட்டதிலேயே சிகிச்சை மேற்கொள்வது நலம்.






பிசிஓடி பிரச்சனக்கு அஞ்சறைப் பெட்டியிலேயே தீர்வு இருக்கிறது எனக் கூறுகிறார் ஆயுர்வேத நிபுணர் தீக்‌ஷா பவ்சார் சாவாலியா.  


1. பெருஞ்சீரகம் (Fennel)
2. கருமிளகு (Black Pepper)
3. வெந்தயம் (Fenugreek)


பெருஞ்சீரகம்: ஆண்ட்ரோஜன் சுரப்பதைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் உடலில் அதிகளவு ரோமம் வளர்வது குறைகிறது. ஒரு தேக்கரண்டி சோம்பு எடுத்து இரவில் தண்ணீரில் ஊறவைத்து. காலையில் அதை 5 நிமிடங்கள் கொதிக்கவைத்து.பின்னர் வடிகட்டி குடிக்கலாம்.


கருமிளகை உடற்பருமன் நோய்க்கும் மருந்து. அது இன்சுலின் சுரக்க உதவுகிறது. இவை தவிர்த்து உடலில் ஹார்மோன்களை சீராக வைக்கிறது. ஒரு மிளகை நன்றாக நுணுக்கு அதனை கொஞ்சம் தேனுடன் காலை எழுந்தவுடன் சாப்பிடலாம்.


 ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம்.


 இல்லாவிட்டால் ஒரு டம்ப்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி சோம்பு, 2 மிளகு, ஒரு தேக்கரண்டி வெந்தயம், ஒரு சிறு துண்டு வெல்லம் சேத்து நன்றாக கொதிக்கவிட்டு அதை அரை கப் ஆக்கி குடிக்கலாம். இது பிசிஓடி பிரச்சனைக்கு நல்ல மருந்து என தீக்‌ஷா கூறுகிறார்.