உக்ரைன்-ரஷ்யா நாடுகள் இடையே போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் தலைநகர் கிவ் உள்ளிட்ட பல இடங்களில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. மேலும் உக்ரைன் நாட்டிலுள்ள சில விமான நிலையங்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. இந்தப் போர் காரணமாக சிவில் விமான போக்குவரத்திற்கு உக்ரைன் நாடு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக அங்கு தங்கியுள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா விமானம் ரூமேனியா மற்றும் ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்களை அனுப்பியுள்ளது.
இந்நிலையில், ”ரஷ்ய ராணுவத்தை சரணடைய நான் கூறியதாக வெளியான செய்தி வதந்தி; அவ்வாறு நான் கூறவில்லை. உக்ரைன் நாட்டை ஒருபோதும் யாருக்கும் விட்டுக்கொடுக்கப்போவதில்லை. குழந்தைகளுக்காக போராடுகிறோம்” என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கடந்த 2 நாட்களை தொடர்ந்து 3 வது நாளான இன்றும் உக்ரைன் நாட்டில் ரஷ்யா போர் புரிந்து வருகிறது. அந்த நாட்டில் உள்ள பல இடங்களை ரஷ்யா கைப்பற்றி விட்டதாகவும், அந்த பகுதிகள் முழுவதும் ரஷ்ய வீரர்கள் குவிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் ராணுவம் சண்டையிடுவதை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று ரஷ்யா திடீர் அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பை ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவ் வெளியிட்டார். இந்நிலையில், ஆட்சி அதிகாரத்தை கையில் எடுக்குமாறு உக்ரைன் ராணுவத்தினருக்கு ரஷ்ய அதிபர் புடின் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
உக்ரைன் ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றும் நிலையில், பேச்சு வார்த்தை மூலம் எளிதான தீர்வை எட்ட முடியும் என அவர் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், அமெரிக்க வெளியிட்ட தீர்மானத்தை ரஷ்யா தகர்த்துள்ளது அனைத்து நாடுகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்