செவ்வாய் மிஷன் குறித்த தனது பேச்சு கேளிக்குள்ளானது குறித்த செய்திக்கு நடிகர் மாதவன் பதிலளித்துள்ளார்.
செவ்வாய் மிஷன் பற்றி மாதவன் பேச்சு:
சமீபத்தில் திரைப்பட நிகழ்வு ஒன்றில் பேசியிருந்த நடிகர் மாதவன், ரஷ்யா சீனா ஐரோப்பிய ஏஜென்ஸிக்கள் எல்லாம் பல முறை முயற்சி செய்து 800 மில்லியன், 900 மில்லியன் செலவு செய்து, 30 வது முறை 32 வது முறை தான் வெற்றிகரமாக செய்தார்கள். 2014ல நம்பி நாராயணனோட மருமகன் அருணன், மிஷன் செவ்வாயின் இயக்குநர் அவர்தான் நம்பிநாரயணனின் க்ரெயோஜெனிக் இஞ்சினை பயன்படுத்தி செய்தனர். நாம் செய்த மிஷனுக்கும், அவர்கள் செய்த மிஷனுக்கும் உள்ள வேறுபாட்டை சொல்கிறேன். அவர்களது ராக்கெட்டில் 3 எஞ்சின் இருந்தது. திரவ எரிபொருள், அப்துல்கலாம் உருவாக்கிய திட எரிபொருள் மற்றும் க்ரையோஜெனிக் இஞ்சின் இது விண்வெளியில் செயற்கைக் கோளை சரியான இடத்தில் நிலை நிறுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு இஞ்சின். 4 நாடுகள் தான் இந்த மிஷனில் வெற்றியடைந்திருக்கிறார்கள். அவர்கள் வைத்திருக்கும் எஞ்சின் உயரத்திற்குச் சென்று ஒரு ஆண்டுகள் பயணித்து செவ்வாயைச் சுற்றும். இந்தியாவில் இருக்கும் எஞ்சின் குறைவான தூரமே பயணிக்கும். ஆனால், எந்த நேரத்தில் எந்த மைக்ரோ நொடியில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட்டை ஏவினால், நமது பஞ்சாங்கத்தில் இருக்கும் மேப்பை பயன்படுத்தி, செயற்கைக் கோளை நிலை நிறுத்தப் பயன்படும் அளவீடுகளை பல ஆயிரங்களுக்கு முன்பே கணக்கு செய்து வைத்திருக்கிறார்கள். இதைப் பயன்படுத்தி செவ்வாய் மிஷனை நடத்தினார்கள். கிட்டத்தட்ட விளையாட்டு சாமான் போல தட்டி தட்டி செவ்வாய் பக்கம் தட்டிவிட்டுவிட்டார்கள் என்று பேசியிருந்தார்.
கிண்டலுக்குள்ளான மாதவன் பேச்சு:
அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் கேளிக்குள்ளானது. அவரது பேச்சை கிண்டல் செய்யும் வீடியோக்களும், பஞ்சாங்கத்தைப் பயன்படுத்தி செவ்வாய்க்கு செயற்கைக்கோளை அனுப்ப முடியுமா, ராக்கெட்டை நிலை நிறுத்த முடியுமா என்று விளக்கமளித்து காணொளிகள் வெளியானது. பஞ்சாங்கத்தைப் பயன்படுத்தி ராக்கெட்டை ஏவ முடியாது என்று இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையும் விளக்கமளித்திருந்தார்.
மாதவனின் பேச்சு சமூக வலைதளங்களில் கேளிக்குள்ளாவது குறித்து அவரிடம் மற்றொரு பேட்டியில் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மாதவன், இந்தியாவில் எத்தனை சதவீதம் பேர் ட்விட்டரில் இருக்கிறார்கள் தெரியுமா? நம் மக்கள் தொகையில் 0.25% பேரை விட குறைவாகவே பயன்படுத்துகின்றனர். 140 கோடி பேரில் 25 லட்சம் பேர் மட்டுமே ட்விட்டரை பயன்படுத்துகின்றனர். நம்ம உலகமே ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம வச்சு தான் சுத்துது. காலைல எழுந்து மக்கள் என்ன நினைக்கிறாங்க என்ன சொல்றாங்க தற்கொலையே பண்ணிக்கிறாங்க. அத பார்த்து மன அழுத்தத்துக்கு ஆளாகிடுறாங்க என்று கூறியிருந்தார்.
மாதவன் ரியாக்ஷன்:
மாதவன் கேளிக்குள்ளான செய்தி, செய்தி இணையதளத்தில் வெளியாகியிருந்தது. அதற்கு பதிலளித்துள்ள மாதவன், தமிழில் பஞ்சாங்கம் என்று சொல்லப்படும் அல்மனாக்கை கூறியதற்கு இது எனக்கு தேவைதான். இருந்தாலும் செவ்வாய் மிஷனில் இரண்டு இஞ்சினை மட்டும் பயன்படுத்தி நாம் அடைந்த இலக்கை யாராலும் எடுக்க முடியாது. அதுவே ஒரு சாதனை. விஞ்ஞானி நம்பி நாராயணின் விகாஸ் எஞ்சின் ஒரு ராக்ஸ்டார் என்று கூறியுள்ளார்.