வித்தியாசமாக புகைப்படம்:


பயணம் தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து வரும் குரோஷியாவைச் சேர்ந்த கிரிஸ்டிஜன் இலிசிக் மற்றும் ஆண்ட்ரியா தம்பதியினர்,ஹனிமூனின் போது வித்தியாசமான புகைப்படங்கள் எடுக்க விரும்பினர். இதையடுத்து வடமேற்கு ஆபிரிக்காவின் மவுரித்தேனியாவில் 2 கி.மீ நீளமுள்ள சரக்கு ரயிலான ட்ரெயின் டு டெசர்ட் மீது புகைப்படத்தை எடுக்க முடிவு செய்தனர். திருமணத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய போட்டோஷூட்கள், உலகெங்கிலும் பிரபலமாகிவிட்டன. ஹனிமுன் செல்லும் போது போட்டோஷீட்டுக்களை பெரும்பாலும் யாரும் எடுப்பதில்லை. ஆனால் உலகின் மிகவும் ஆபத்தான ரயிலின் மேல் தங்கள் ஹனிமூன் புகைப்படங்களை எடுத்ததற்காக திருமண தம்பதியினர் வைரலாகியுள்ளனர்.




உலகின் ஆபத்தான ரயில்:


ட்ரெய்ன் டு டெசர்ட்  என்ற சரக்கு ரயிலானது அட்லாண்டிக் கடற்கரையில் உள்ள நௌதிபோவில் உள்ள துறைமுகத்திலிருந்து அட்லாண்டிக் கடலில் உள்ள ஒரு சிறிய துறைமுகத்திற்கு இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது  இரும்புத் தாதுவை மட்டுமே சுமந்து செல்கின்றன, பயணிகள் இல்லை.700 கி.மீ க்கும் அதிகமான தூரம் வரை பயணம் செல்லும் ரயிலின் 20 மணி நேர சவாரி மிகவும் சவாலானது. இருப்பினும் வானிலை நிலைமைகள் மிகவும் சிக்கலானவை. பகல் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாகவும், இரவு விழும் போது, அது ஜீரோ டிகிரிக்கும் கீழே குறைகிறது என்று இலிசிக் கூறுகிறார்.






வைரல்:


இந்த ஜோடி தங்கள் திருமண உடைகளில் ரயிலின் விளிம்பில் படுத்தவாறும், நின்றவாறும் எடுத்துள்ள ஆபத்தான போட்டோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண