தமிழ் சினிமாவில் மிகவும் தவிர்க்க முடியாத ஒரு பாடல் ஆசிரியர்களில் ஒருவர் நா.முத்துக்குமார். தன்னுடைய வரிகளின் பாடல்களுக்கு மேலும் அழகு சேர்ப்பார். காதல் பாடல்களில் தத்துவங்களை கூட அவ்வளவு அழகாக சொல்ல முடியும் என்பதை இவர் நிரூபித்து காட்டியவர். இப்படிப்பட்ட மகாத்தான கவிஞரின் பிறந்த தினத்தில் இவருடைய சிறப்பான பாடல்கள் என்னென்ன?


1.கனா காணும் காலங்கள்:


ரவிக்கிருஷ்ணா, சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்று இருக்கும். இந்தப் பாடலுக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருப்பார். இப்பாடலை ஹரிஸ் ராகவேந்திரா மற்றும் மதுமிதா பாடியிருப்பார்கள். 


“பறக்காத


பறவைக்கெல்லாம்


பறவை என்று பெயரில்லை


திறக்காத மனதில் எல்லாம்


களவு போக வழியில்லை


தனிமையில் கால்கள் எதை


தேடி போகிறதோ திரி தூண்டி


போன விரல் தேடி அலைகிறதோ..”


 



2.நெஞ்சோடு கலந்திடு:


தனுஷ், சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்று இருக்கும். இந்தப் பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருப்பார். உன்னிகிருஷ்ணன் மற்றும் சுஜாதா இப்பாடலை பாடியிருப்பார்கள்.


“காலங்கள் ஓடும்


இது கதையாகி போகும்


என் கண்ணீர் துளியின்


ஈரம் வாழும் தாயாக


நீதான் தலை கோத


வந்தாலும் மடிமீது


மீண்டும் ஜனனம் வேண்டும்


என் வாழ்க்கை


நீ இங்கு தந்தது அடி உன்


நாட்கள் தானே இங்கு


வாழ்வது காதல் இல்லை


இது காமம் இல்லை இந்த


உறவுக்கு உலகத்தில் பெயரில்லை...


 



3. என் காதல் சொல்ல நேரம் இல்லை:


கார்த்திக், தமன்னா நடிப்பில் வெளியான திரைப்படம் பையா. இந்தப் படத்தில் இப்பாடல் இடம்பெற்று இருக்கும். யுவன் சங்கர் இசையமைத்து பாடிய சிறப்பான பாடல்களில் இதுவும் ஒன்று. 


“காதல் வந்தாலே கண்ணோடு தான்


கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ


கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி


இந்த விளையாட்டை ரசித்தேனடி


 உன் விழியாலே உன் விழியாலே


என் வழி மாறும் கண் தடுமாறும்


அடி இது ஏதோ புது ஏக்கம்


இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும்...”


 



4. முதல் மழை:


விக்ரம்,த்ரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் பீமா. இப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்று இருக்கும். இந்தப் பாடலை ஹரிசரண் மற்றும் மஹதி பாடியிருப்பார்கள். இப்பாடலுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருப்பார். 


“ஓர்நாள் உன்னை


நானும் காணாவிட்டால்


என் வாழ்வில் அந்த நாளே


இல்லை….ஓ… ஓர்நாள் உன்னை


நானும் பார்த்தே விட்டால்


அந்நாளின் நீளம் போதவில்லை


இரவும் பகலும்


ஒரு மயக்கம் நீங்காமலே


நெஞ்சில் இருக்கும் உயிரின்


உள்ளே உந்தன் நெருக்கம்


இறந்தாலுமே என்றும் இருக்கும்


நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்...


 



5. ஒரு பாதி கனவு:


விக்ரம், அனுஷ்கா நடிப்பில் வெளியான திரைப்படம் தாண்டவம். இந்தப் படத்தில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஹரிசரண் மற்றும் வந்தனா ஶ்ரீனிவாசம் பாடியிருப்பார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையில் இப்பாடல் சிறப்பான ஒன்றாக அமைந்திருக்கும். 


 


“ இரவு வரும் திருட்டு


பயம் கதவுகளை சோ்த்து விடும்


ஓ… கதவுகளை திருடிவிடும்


அதிசயத்தை காதல் செய்யும்


இரண்டும் கை கோா்த்து


சோ்ந்தது இடையில் பொய்பூட்டு


போனது வாசல் தல்லாடுதே


திண்டாடுதே கொண்டாடுதே..”


 



இவை தவிர கண்பேசும் வார்த்தைகள், எங்கேயோ பார்த்த மயக்கம் போன்ற பல ஹிட் பாடல்களை நா.முத்துகுமார் நமக்கு வழங்கியுள்ளார். 


மேலும் படிக்க: சின்மயி குரலில் மனதை மயக்கும் பாடல்கள் !