‘ஆஹா’ ஓடிடி தளம்:


நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹூலூ ஆகிய தளங்களைப் போல கோலிவுட் ரசிகர்களுக்கென தனியாக தொடங்கப்பட்ட ஓடிடி இயங்குதளம் ஆஹா. டோலிவுட்டில் முதலில் தொடங்கப்பட்ட இந்த தளம், சமீபத்தில் தமிழிலும் தொடங்கப்பட்டது. இதில், தமிழ் மொழியில் தயாரிக்கப்பட்ட தொடர்கள் மற்றும் படங்கள் ஆகியவை இடம் பெற்றிருக்கும். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன், அதர்வா நடித்த  குறுதியாட்டம், ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள மஹா உள்ளிட்ட படங்கள் இந்த ஓடிடி தளத்தில் இடம் பெற்றுள்ளன. சமீபத்தில், நடிகர் மஹத் மற்றும் தேவிகா சத்தீஷ் ஆகியோர் நடித்துள்ள எமோஜி என்ற தொடர் வெளியானது. நடிகர் ஜீவா தொகுப்பாளராக பங்குபெரும் 'சர்கார் வித் ஜீவா'  என்ற நிகழ்ச்சியும் இதில் இடம்பெற்றுள்ளது. இப்படி, தமிழ் மக்களின் திரை தாகத்தை தீர்க்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆஹா ஓடிடி தளத்தில், இன்னும் நிறைய மாற்றங்களை கொண்டு வரும் வகையில் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. 


 






Also Read|‛படம் பிடிச்சா ஏன் புறக்கணிக்கப் போறாங்க...’ -ஒப்புக்கொண்ட சிம்பு!


தமிழ் மொழியில் கொரியன் சீரீஸ்:


கொரியன் கன்டென்டுகளுக்கு இந்தியாவில் பெருமளவில் ரசிகர்கள் உண்டு. அதுவும் குறிப்பாக பெண் ரசிகர்கள். கொரியன் மொழியில் வெளியாகும் பாடல்கள், படங்கள், தொடர்கள் என அனைத்துமே இந்தியாவில் பெருமளவில் ஸ்டீரீம் ஆகி வருகின்றது. கொரியன் சீரீஸ்களுக்கு இந்தியாவில், குறிப்பாக தமிழ் நாட்டில் மவுசு அதிகமாகவே உள்ளது.




ஸ்குவிட் கேம், ஹோம் டவுன் ச்சா ச்சா, மிஸ்டர் குயின் உள்ளிட்ட தொடர்கள் இந்தியாவில் பெரிதளவில் ஹிட் ஆகியுள்ளது. இதனால் இப்படிப்பட்ட கொரியன் சீரீஸ் மற்றும் படங்களை ஆஹா ஓடிடி தளத்தில் தமிழ் மொழியில் வெளியிடவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த ஒப்பந்தத்தில் ஹாங்காங்கை சேர்ந்த O4 என்ற ஊடக நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.  O4 நிறுவனமும் தனது சமூக வலைதளம் மூலம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.


இது குறித்து அரிய, இங்கே க்ளிக் செய்யவும்


இந்த வருடத்தின் இறுதியில் கொரியன் சீரீஸ்கள் மற்றும் படங்கள் ஆஹா தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.